என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
உள்ளூர் செய்திகள்
![பஞ்சாயத்து வார்டு உறுப்பினர்களுக்கான பயிற்சி முகாம் பஞ்சாயத்து வார்டு உறுப்பினர்களுக்கான பயிற்சி முகாம்](https://media.maalaimalar.com/h-upload/2023/06/16/1899300-img-20230615-wa0017.webp)
பஞ்சாயத்து வார்டு உறுப்பினர்களுக்கான பயிற்சி முகாம்
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- இலக்குகள் குறித்த பயிற்சி முகாம் கெரகோடஅள்ளி பஞ்சாயத்தில் நடந்தது.
- முகாமில் வட்டார வளர்ச்சி அலுவலர் ரவி தலைமை வகித்தார்.
காரிமங்கலம்,
தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு ஊராட்சிகளை சேர்ந்த வார்டு உறுப்பினர்களுக்கான நீடித்த நிலையான இலக்குகள் குறித்த பயிற்சி முகாம் கெரகோடஅள்ளி பஞ்சாயத்தில் நடந்தது.
முகாமில் வட்டார வளர்ச்சி அலுவலர் ரவி தலைமை வகித்தார். வட்டார வளர்ச்சி அலுவலர் கலைவாணி பயிற்சி முகாமை தொடங்கி வைத்து பேசினார்.
கிருஷ்ணகிரி அணையில் செயல்பட்டு வரும் பயிற்சி மைய பயிற்சியாளர்கள ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் பணிகள் மற்றும் ஊராட்சிகளில் நீடித்த நிலையான வளர்ச்சிகள் குறித்த வார்டு உறுப்பினர்கள் பங்கு ஆகியவை குறித்து பயிற்சி அளித்தனர்.
மூன்று நாட்கள் நடக்கும் பயிற்சி முகாமில் வார்டு உறுப்பினர்களுக்கு பல்வேறு செயல்முறை விளக்கங்கள் அளிக்கப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளை துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் ஊராட்சி செயலாளர்கள் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.