என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்
கால்நடை உதவி மருத்துவர்களுக்கு பயிற்சி

- கால்நடைகளுக்கு சிறப்பான மருத்துவ உதவி வழங்க வேண்டும்.
- விவசாயத்துக்கு அடுத்ததாக கால்நடை வளர்ப்புத் தொழில் பிரதானமாக உள்ளது.
திருப்பூர் :
திருப்பூர் மண்டல கால்நடை பராமரிப்புத் துறையில், காலியாக உள்ள பணியிடங்களுக்கு புதிதாக கால்நடை உதவி மருத்துவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.அவர்களுக்கான பயிற்சி கூட்டம் பல்லடம் வனாலயம் அடிகளார் அரங்கத்தில் நடந்தது. இணை இயக்குநர் (பொறுப்பு) கவுசல்யா தேவி முன்னிலை வகித்தார்.
வனம் அமைப்பின் தலைவர் சுவாதி கண்ணன் வரவேற்றார்.கால்நடை துறை மண்டல இணை இயக்குனர் பாரிவேந்தன் தலைமை வகித்து பேசுகையில், திருப்பூர் மாவட்டத்தில் விவசாயத்துக்கு அடுத்ததாக கால்நடை வளர்ப்புத் தொழில் பிரதானமாக உள்ளது.விவசாயிகளின் வாழ்வாதாரம் மேம்படவும், கால்நடைகளின் எண்ணிக்கையை பெருக்கி, அவற்றின் ஆரோக்கியத்தைப் பேணிக்காக்க வேண்டியதும் நமது பொறுப்பு.
இதற்காக கால்நடைகளுக்கு சிறப்பான மருத்துவ உதவி வழங்க வேண்டும்என்றார்.அதன்பின், வனாலயம் வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன. மண்டல கால்நடை உதவி இயக்குனர்கள் பரிமள ராஜ்குமார், ஜெயராமன், வெங்கடேசன், உமா சங்கர் மற்றும் வனம் அமைப்பு நிர்வாகிகள், உறுப்பினர்கள் பங்கேற்றனர்.