என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
உள்ளூர் செய்திகள்
![யோகா போட்டியில் ட்ரஷர் ஐலண்ட் பள்ளி மாணவர்கள் சாதனை யோகா போட்டியில் ட்ரஷர் ஐலண்ட் பள்ளி மாணவர்கள் சாதனை](https://media.maalaimalar.com/h-upload/2023/09/11/1948065-2treasureschool.webp)
யோகா போட்டியில் ட்ரஷர் ஐலண்ட் பள்ளி மாணவர்கள் சாதனை
![TNLGanesh TNLGanesh](https://media.maalaimalar.com/profiles/75922/1728216-ganeshprofile.jpg)
- யோகா போட்டி கோவில்பட்டி ஆச்சாரியா பள்ளியில் நடைபெற்றது.
- மாணவன் இஷாந்த் ராகவன் 12 வயதிற்குட்பட்டோர் பிரிவில் முதலிடம் பெற்றார்.
தென்காசி:
மதுரை சகோதயா ஒவ்வொரு வருடமும் சி.பி.எஸ்.இ. பள்ளிகளுக்கு இடையே பல்வேறு விளையாட்டுப் போட்டி களை நடத்தி வருகிறது. அதன்படி யோகா போட்டி கோவில்பட்டி ஆச்சாரியா பள்ளியில் நடைபெற்றது. பல்வேறு சி.பி.எஸ்.இ. பள்ளிகளை சேர்ந்த மாணவ- மாணவி கள் கலந்து கொண்ட இப்போட்டியில் தென்காசி ட்ரஷர் ஐலண்ட் இன்டர்நேஷனல் பள்ளி 6-ம் வகுப்பு மாணவன் இஷாந்த் ராகவன் 12 வயதிற்குட்பட்ட மாண வர்கள் பிரிவில் முதலிடத்திலும், 7-ம் வகுப்பு மாணவன் முகமது இலியாஸ் 14 வயதுக்குட்பட்ட மாணவர்கள் பிரிவில் முதலிடத்திலும் வெற்றி பெற்று சாதனை படை த்தனர். வெற்றி பெற்ற மாணவர்கள் தங்கப்பதக்கம் மற்றும் சான்றிதழ் பெற்றனர். மண்டல அளவில் முதலி டத்தில் வெற்றி பெற்ற மாணவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் பள்ளியின் தாளாளர் டாக்டர் சேக் செய்யது அலி மற்றும் பள்ளியின் முதல்வர் சமீமா பர்வீன் பாராட்டி வாழ்த்துக்களை தெரிவித்தனர்.