என் மலர்
உள்ளூர் செய்திகள்
அகில பாரத அய்யப்ப சேவா சங்கம் சார்பில் அன்னதான விழா
- அன்னதானத்தில் 6500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
- பூஜையில் அய்யப்ப பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டு வழிபாடு நடத்தினர்.
திருப்பூர்:
திருப்பூர் மங்கலம் ரோடு பாரப்பாளைத்தில் அகில பாரத அய்யப்ப சேவா சங்கம் மகரஜோதி பக்தர்கள் குழு இணைந்து நடத்திய 27 ம் ஆண்டு அன்னதான விழா நடைபெற்றது. 26 ந்தேதி திங்கட்கிழமை ஹோமமும், 27ந்தேதி செவ்வாய்க்கிழமை மாலை 6 மணி அளவில் கன்னி சாமி பூஜையும் நடைபெற்றது. இந்த பூஜையில் அய்யப்ப பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டு வழிபாடு நடத்தினர்.
நேற்று புதன்கிழமை காலை 10 மணி அளவில் சங்க கொடியை திருப்பூர் மாவட்ட செயலாளர் ராமகிருஷ்ணன் ஏற்றினார். அதனையடுத்து ஸ்ரீலஸ்ரீ பொன்னுச்சாமி சுவாமிகள் மற்றும் ஸ்ரீலஸ்ரீ மூர்த்தி லிங்கம் தம்பிரான் சுவாமிகள் ஆகியோர் அன்னதான த்தை தொடங்கி வைத்தனர். இந்த அன்னதானத்தில் 6500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
திருப்பூர் மாநகர மேயர் தினேஷ் குமார், திருப்பூர் தெற்கு சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் செல்வராஜ், மாமன்ற உறுப்பினர்கள் சாந்தாமணி முருகசாமி, அன்பகம் திருப்பதி, திருப்பூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் முருகேசன், கோபாலகிருஷ்ணன், ரெட் கிராஸ் செயலாளர் தாமோதரன், வெங்கடாசலம், தெய்வசிகாமணி, பழனிச்சாமி ஆகியோர் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை தலைவர் சுனில் குமார், செயலாளர் பழனிவேல், பொருளாளர் லோகநாதன் திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் சரவணன், சங்கர் கணேஷ், விழா கமிட்டி தலைவர்கள் கிருஷ்ணசாமி, பாஸ்கர், கண்ணப்பன் ஆகியோர் செய்து இருந்தனர்.