என் மலர்
உள்ளூர் செய்திகள்

X
கோப்பு படம்.
கம்பத்தில் கஞ்சா பதுக்கிய 2 பெண்கள் கைது!
By
மாலை மலர்26 March 2023 12:25 PM IST

- கம்பம் வடக்கு போலீசார் போதை பொருள் தடுப்பு சம்மந்தமாக ரோந்து சென்றனர்.
- 2 பேரை போலீசார் கைது செய்து கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
கம்பம்:
கம்பம் வடக்கு போலீசார் போதை பொருள் தடுப்பு சம்மந்தமாக ரோந்து சென்றனர். அப்போது கம்பம் உழவர்தெருவை சேர்ந்த மஞ்சுளா (வயது 47) என்பவர் கஞ்சா பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் அவரை கைதுசெய்து கஞ்சாவை பறிமுதல் செய்தனர். மேலும் கோம்பைரோட்டை சேர்ந்த விமலா (35) என்பவரும் கஞ்சா பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து இவரையும் போலீசார் கைது செய்து கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
Next Story
×
X