என் மலர்
உள்ளூர் செய்திகள்
பரமசிவம்பாளையத்தில் குழந்தைகளுக்கான தடுப்பூசி முகாம்
- குழந்தைகளுக்கு உணவின் முக்கியத்துவம் பற்றி எடுத்துரைக்கப்பட்டது.
- அங்கன் வாடிமைய பணியாளர் ரகுபதி, பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
மங்கலம் :
பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை சார்பில் திருப்பூர் மாவட்டம் சாமளாபுரம் பேரூராட்சி, பரமசிவம்பாளையம் பகுதியில் உள்ள அங்கன்வாடி மையத்தில் பிறந்த குழந்தை முதல் 5வயது வரையுள்ள குழந்தைகளுக்கான தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இம்முகாமில் குழந்தைகளுக்கும், கர்ப்பிணி தாய்மார்களுக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டது. தாய்மார்களுக்கும், கர்ப்பிணி தாய்மார்களுக்கும், குழந்தைகளுக்கும் பொது சுகாதார நலக்கல்வி ,இணை உணவின் முக்கியத்துவம் பற்றி எடுத்துரைக்கப்பட்டது.
இந்த முகாமில் சாமளாபுரம் பேரூராட்சி மன்றத்தலைவர் விநாயகாபழனிச்சாமி , சாமளாபுரம் பேரூராட்சி மன்ற துணைத்தலைவர் குட்டிவரதராஜன், சாமளாபுரம் பேரூராட்சி மன்ற வார்டு கவுன்சிலர் மேனகாபாலசுப்பிரமணியம், பள்ளபாளையம் கிராம சுகாதார செவிலியர் மாரியாத்தாள், அங்கன் வாடிமைய பணியாளர் ரகுபதி, பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.