என் மலர்
உள்ளூர் செய்திகள்

வலுப்பூர் அம்மன் கோவில் தேர் திருவிழா
- 16 வகை வாசனை திரவியங்களால், சிறப்பு அபிஷேக பூஜை நடைபெற்றது.
- பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு வலுப்பூர் அம்மனை வழிபட்டனர்.
பல்லடம் :
பல்லடம் அருகே உள்ள பொங்கலூர் சேமலை கவுண்டம்பாளையத்தில் வலுப்பூர் அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் தேர்திருவிழா கடந்த 26-ம் தேதி விநாயகர் பூஜையுடன் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து வெள்ளிக்கிழமை காலை 7 மணிக்கு காப்பு கட்டுதல், கொடியேற்றம் மற்றும் அலகுமலைக்கு சுவாமி திருவீதி உலா ஆகியன நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து கட்டளைதாரர்களின் உபயத்துடன் சுவாமி திருவீதி உலா நடைபெற்றது. இதன் பின்னர் வலுப்பூர் அம்மன் கோவில் தேரோட்டம் நேற்று ஞாயிற்றுக்கிழமை மதியம் 2 மணிக்கு அலகுமலை கைலாசநாதர் கோவில் பகுதியில் துவங்கி வலுப்பூர் அம்மன் கோவிலுக்கு ஊர்வலமாக வந்தது.
இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். இதைத் தொடர்ந்து வலுப்பூர் அம்மனுக்கு, பால், சந்தனம், தேன், உள்ளிட்ட 16 வகை வாசனை திரவியங்களால், சிறப்பு அபிஷேக பூஜை நடைபெற்றது. இதில் பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு வலுப்பூர் அம்மனை வழிபட்டனர்.