search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வத்தல்மலை  மாரியம்மன் கோவில் திருவிழா
    X

     கிராம மக்கள் மாவிளக்கு எடுத்து கொண்டு ஊர்வலமாக வந்த காட்சி. (உள்படம்: சிறப்பு அலங்காரத்தில் மாரியம்மன்)

    வத்தல்மலை மாரியம்மன் கோவில் திருவிழா

    • ஒயிலாட்டம் மற்றும் பால் சிலம்பு காளியம்மனுக்கு மாவிளக்கு எடுத்தல் போன்ற நிகழ்ச்சியும் நடைபெற்றது.
    • மலை கிராம மக்கள் அனைவரும் மாவிளக்கு எடுத்து கொண்டு கோவிலுக்கு மங்கள வாத்தியங்கள் முழங்க ஊர்வலமாக வந்தனர்.

    தொப்பூர்,

    தருமபுரி மாவட்டம், வத்தல் மலை அருகே உள்ள பால் சிலம்பு கிராமத்தில் காளியம்மன் கோவில் வளாகத்தில் மாரியம்மன் கோவில் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது.

    இதில் சித்திரை மாதம் 6-ம் நாளையொட்டி கொடியேற்றுதல் மற்றும் கங்கனம் கட்டுதல் நிகழ்ச்சியும், 2-ம் நாள் மங்கள வாத்தியங்களுடன் கூழ் ஊற்றுதல் நிகழ்ச்சி, 3-ம் நாளில் பால்குடம் எடுத்தல், கரகாட்டம், மயிலாட்டம், ஒயிலாட்டம் மற்றும் பால் சிலம்பு காளியம்மனுக்கு மாவிளக்கு எடுத்தல் போன்ற நிகழ்ச்சியும் நடைபெற்றது.

    மலை கிராம மக்கள் அனைவரும் மாவிளக்கு எடுத்து கொண்டு கோவிலுக்கு மங்கள வாத்தியங்கள் முழங்க ஊர்வலமாக வந்தனர்.

    மலை கிராமம் என்பதால் பாரம்பரிய முறைப்படி நடைபெற்றது. மாரியம்மன் சிறப்பு அலங்காரத்தில் பகதர்க ளுக்கு அருள்பாளித்தார்.

    அனைத்து பக்தர்களுக்கும் அன்னதானம் வழங்க பட்டது.

    இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஊர் கவுண்டர்கள் நாட்டு கவுண்டர் மற்றும் ஊர் முக்கியஸ்தர்கள், பொது மக்கள், விழா குழுவினர் செய்திருந்தனர்.

    Next Story
    ×