என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
உள்ளூர் செய்திகள்
![கலைஞர் உரிமைத்தொகை ரூ.1000 வேண்டி தென்காசி கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்க குவிந்த கிராம பெண்கள் கலைஞர் உரிமைத்தொகை ரூ.1000 வேண்டி தென்காசி கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்க குவிந்த கிராம பெண்கள்](https://media.maalaimalar.com/h-upload/2023/09/26/1956356-4oldladiespetition.webp)
பிள்ளையார் குளம் கிராமத்தைச் சேர்ந்த பெண்கள் உரிமை தொகை கேட்டு கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்த போது எடுத்தபடம்.
கலைஞர் உரிமைத்தொகை ரூ.1000 வேண்டி தென்காசி கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்க குவிந்த கிராம பெண்கள்
![TNLGanesh TNLGanesh](https://media.maalaimalar.com/profiles/75922/1728216-ganeshprofile.jpg)
- கலைஞர் உரிமைத்தொகை பலருக்கு கிடைக்க வில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
- தொலைபேசி எண்கள் இல்லாமல் முதியவர்கள் பலருக்கும் உதவித்தொகை கிடைப்பதில் சிக்கல் நீடித்து வருகிறது.
தென்காசி:
தமிழ்நாடு அரசின் சார்பில் தகுதி வாய்ந்த பெண்களுக்கு கலைஞர் உரிமை தொகையாக ரூ.1,000 வழங்கப்பட்டு வருகிறது.
ரூ. 1000 உரிமைத்தொகை
இருப்பினும் தனியார் நிறுவனங்களில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற பெண்கள் அந்நிறுவனங்களின் சார்பில் ஓய்வு தொகையைப் பெற்று வந்தாலும் தமிழக அரசின் சார்பில் கொடுக்கப்படும் கலைஞர் உரிமைத்தொகை ரூ. 1000 பலருக்கும் கிடைக்க வில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதிலும் குறிப்பாக எவ்வித ஓய்வூதிய மும் பெறாமல் இருந்து வரும் வயதான முதியவர்கள் பலருக்கும் தொலைபேசி எண்கள் எதுவும் இல்லாமல் உதவித்தொகை கிடைப்பதில் சிக்கல் நீடித்து வருகிறது.
மூதாட்டி கோரிக்கை
அதன்படி நேற்று தென்காசி மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு கடையம் ஒன்றியத்திற்கு உட்பட்ட மந்தியூர் ஊராட்சி பிள்ளை யார்குளம் கிராமத்தைச் சேர்ந்த 30-க்கும் மேற்பட்ட மூதாட்டிகள், முன்னர் பீடி சுற்றும் தொழிலில் ஈடுபட்டதன் காரணமாக அதற்கு ஓய்வூதியமாக மாதம் ரூ. 700 பெற்று வருகிறோம்.
ஆனால் தற்போது தமிழக அரசின் சார்பில் வழங்கப்பட்டு வரும் கலைஞர் உரிமைத்தொகை ரூ. 1000 பெறுவதற்கு பதிவு செய்தி ருந்தும் கிடைக்கவில்லை. எனவே பீடி தொழிலாளர்க ளாகிய வயதான எங்களுக்கு ஆயிரம் உரிமை தொகை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி கலெக்டர் ரவிச்சந்திரனை சந்தித்து மனு அளித்தனர்.