search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சில்லார அள்ளி கிராமத்தில் வீடுகளுக்கு முன் குப்பையை கொட்டிய பஞ்சாயத்து தலைவர் மீது   கிராம மக்கள் புகார்
    X

    தருமபுரி கலெக்டர் அலுவலகத்திற்கு, மனு அளிக்க வந்த கிராம மக்களை படத்தில் காணலாம்.

    சில்லார அள்ளி கிராமத்தில் வீடுகளுக்கு முன் குப்பையை கொட்டிய பஞ்சாயத்து தலைவர் மீது கிராம மக்கள் புகார்

    • மூன்றரை வருடமாக பஞ்சாயத்து தலைவர் குப்பை கழிவுகளை கொட்டி அங்கேயே எரித்து வருகிறார்
    • குப்பை கழிவுகள் எரிக்கப்பட்டு, சாம்பல்கள் குழி தோண்டி புதைக்கப்பட்டது.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டம் , பாப்பிரெட்டிபட்டி அடுத்த சில்லார அள்ளி கிராம மக்கள் கலெக்டரிடம் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    சில்லார அள்ளி கிராமத்தில் 20 வீடுகளுக்கு முன்பு மூன்றரை வருடமாக பஞ்சாயத்து தலைவர் குப்பை கழிவுகளை கொட்டி அங்கேயே எரித்து வருகிறார். அதனால் மாசு ஏற்படுவது மட்டுமின்றி அங்கு வசிக்கும் மக்களுக்கு நோய் தொற்று ஏற்பட்டு அவதிக்குள்ளாகி வருகின்றனர். இது குறித்து வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் புகார் தெரிவித்த பின்னர் அதிகாரிகளின் நடவடிக்கையால் குப்பை கழிவுகள் எரிக்கப்பட்டு, சாம்பல்கள் குழி தோண்டி புதைக்கப்பட்டது.

    மீண்டும் மறுநாளே பஞ்சாயத்து தலைவர் அதே இடத்தில் குப்பைகளை கொட்டி அராஜகத்தில் ஈடுபட்டு வருகிறார். ஆகையால் அராஜகத்தில் ஈடுபடும் பஞ்சாயத்து தலைவர் மீது நடவடிக்கை மேற்கொண்டு அங்குள்ள குப்பைகளை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×