search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா - ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

    • பழமையான புகழ்பெற்ற ஸ்ரீ பெரிய விநாயகர்,ஸ்ரீ தன்னாட்சியப்பன், ஸ்ரீ துர்க்கை அம்மன் கோவில் உள்ளது.
    • யாகசாலை பூஜை வழிபாடு , முளைப்பாரி எடுத்து வழிபாடு நடைபெற்றது.

    உடுமலை :

    திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்துள்ள சின்ன வீரன்பட்டி ஊராட்சியில் பல ஆண்டுகள் பழமையான புகழ்பெற்ற ஸ்ரீ பெரிய விநாயகர்,ஸ்ரீ தன்னாட்சியப்பன், ஸ்ரீ துர்க்கை அம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது.

    பேரூர் சாந்தலிங்கம் மருதாசல அடிகளார் தலைமையில் நடைபெற்ற விழாவில், புண்ணிய தலங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட தீர்த்தங்கள் ஊர்வலமாக கொண்டு வந்து வேத மந்திரங்கள் முழங்க கோபுர கலசங்களுக்கு ஊற்றப்பட்டது. பின்னர் கோபுரங்களுக்கு தீபாராதனை காட்டிய பின் பொதுமக்கள் மீது புனிதநீர் தெளிக்கப்பட்டது.

    பின்னர் யாக சாலை குண்டம் அமைந்துள்ள இடத்தை பலர் தரிசனம் செய்தனர். கும்பாபிஷேக விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக யாகசாலை பூஜை வழிபாடு , முளைப்பாரி எடுத்து வழிபாடு நடைபெற்றது.

    விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழுவினர் கருப்புசாமி, திவாகரன், தயாநிதி, பாலகிருஷ்ணன், ஜெகநாதன், மாணிக்கவாசகம், சுப்பிரமணி, குழந்தைவேல் உட்பட பலர் செய்திருந்தனர்.

    Next Story
    ×