search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    அரிட்டாபட்டி பகுதியில் ஒரு பிடி மண்ணைக் கூட எடுக்க விட மாட்டோம்-  வைகோ உறுதி
    X

    அரிட்டாபட்டி பகுதியில் ஒரு பிடி மண்ணைக் கூட எடுக்க விட மாட்டோம்- வைகோ உறுதி

    • ஆர்ப்பாட்டத்தில் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.
    • ஸ்டெர்லைட், மீத்தேன், முல்லைப் பெரியாறு உள்ளிட்ட மக்கள் பிரச்னைகளில் போராட்டம் நடத்தியுள்ளேன்.

    மேலூர்:

    மதுரை மாவட்டம் மேலூர் பஸ் நிலையம் முன்பாக, டங்ஸ்டன் சுரங்க திட்டத்தைக் கண்டித்து, ம.தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் மார்நாடு ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை தாங்கினார். பூமிநாதன் எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார். துணை பொதுச் செயலாளர்கள் மல்லை சத்யா, ரொகையா, மாநில பொருளாளர் செந்திலதிபன் உள்பட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் டங்ஸ்டன் சுரங்க திட்டத்திற்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டன.

    இந்த ஆர்ப்பாட்டத்தில் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.

    கடந்த ஒரு ஆண்டு காலமாக, உடல்நிலை சரியில்லாத காரணத்தால், எந்த போராட்டத்திலும் கலந்து கொள்ள வில்லை. உங்களில் ஒருவரான நான் தமிழகத்தில் பல்வேறு போராட்டங்களில் கலந்து கொண்டேன். ஸ்டெர்லைட், மீத்தேன், முல்லைப் பெரியாறு உள்ளிட்ட மக்கள் பிரச்னைகளில் போராட்டம் நடத்தியுள்ளேன்.


    முல்லை பெரியாறு அணையை காக்க, 10 லட்சம் விவசாயிகளுடன் நடைபயணம் மேற்கொண்டேன். இதில் கட்சி வேறுபாடின்றி, பல்வேறு தரப்பினர் என்னை வரவேற்றனர். ஒத்தக்கடை யானை மலை பகுதியில் சிற்ப நகர் அமைக்கும் திட்டத்திற்கு எதிராக நான் போராடியதால், மாற்றுக் கருத்து கொண்டிருந்தாலும், எனது கோரிக்கையை ஏற்று அப்போதைய முதல்வர் கருணாநிதி, திட்டத்தை ரத்து செய்தார்.

    தற்போது, வேதாந்தா நிறுவனத்தின் துணை நிறுவனமான இந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம் அரிட்டாப் பட்டியில் 5000 ஏக்கரில் டங்ஸ்டன் சுரங்க திட்டத்தை செயல்படுத்த முயற்சிக்கிறது.

    அரிட்டாப்பட்டி பகுதி 3000 ஆண்டு பழமையான பகுதி. மலைகள், சமணர் படுகை, பல்லுயிர் தலம், குடைவரை கோவில்கள் உள்ள பகுதி. ம.தி.மு.க. இருக்கும் வரை இங்கு ஒரு பிடி மண்ணை கூட எடுக்க விட மாட்டோம். விரைவில் இந்த பிரச்னை தொடர்பாக அடுத்த கட்ட போராட் டத்தை அறிவிப்போம்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    Next Story
    ×