என் மலர்
உள்ளூர் செய்திகள்
X
ராயக்கோட்டை அருகே தக்காளி தோட்டத்தை நாசம் செய்த காட்டுயானைகள்
BySuresh K Jangir28 Dec 2022 2:30 PM IST
- விற்பனைக்காக பாக்சில் பறித்து வைத்திருந்த தக்காளிகளை காட்டுயானைகள் மிதித்து துவம்சம் செய்தது.
- விளைநிலங்களை சேதப்படுத்திய காட்டுயானைகளை வனத்துறையினர் பட்டாசு வெடித்தும், தீ பந்தம் காண்பித்தும் வனப்பகுதிக்குள் விரட்டினர்.
ராயக்கோட்டை:
கிருஷ்ணகிரி மாவட்டம், ராயக்கோட்டை அருகே ஊடேதுர்க்கம் வனப்பகுதியில் 20-க்கும் மேற்பட்ட காட்டுயானைகள் உள்ளது.
இந்த யானைகள் நேற்றிரவு வெப்பாளப்பட்டி கிராமத்தில் உள்ள அ.தி.மு.க. மாவட்ட கவுன்சிலர் விமலா சண்முகம் என்பவரின் 10 ஏக்கர் விளைநிலத்திற்குள் காட்டு யானைகள் புகுந்த தக்காளி தோட்டத்தை நாசம் செய்தது. பின்னர் விற்பனைக்காக பாக்சில் பறித்து வைத்திருந்த தக்காளிகளை மிதித்து துவம்சம் செய்தது.
இதுகுறித்து வனசரக பார்த்தசாரதிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் அவர் தலைமையில் வனவர் நாராயணன் மற்றும் வனத்துறையினர் விரைந்து வந்தனர். விளைநிலங்களை சேதப்படுத்திய காட்டுயானைகளை பட்டாசு வெடித்தும், தீ பந்தம் காண்பித்தும், அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டினர்.
Next Story
×
X