search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திண்டிவனத்தில் தாசில்தார் அலுவலகத்தை பெண்கள்  முற்றுகை:அதிகாரியுடன் கடும் வாக்குவாதம்
    X

    திண்டிவனத்தில் தாசில்தார் அலுவலகத்தில் அதிகாரியை முற்றுகையிட்ட பெண்கள்.

    திண்டிவனத்தில் தாசில்தார் அலுவலகத்தை பெண்கள் முற்றுகை:அதிகாரியுடன் கடும் வாக்குவாதம்

    • சுமார் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
    • பெண்கள் திண்டிவனம் தாசில்தார் அலுவல கத்தில் தாசில்தாரி டம் மனு கொடுக்க வந்தனர்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் 20-வது வார்டில் சுமார் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இதில் சுமார் 300-க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு மட்டும் மகளிர் உரிமை கிடைத்துள்ள தாகவும் ஆனால் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினருக்கு தகுதி இருந்தும் மகளிர் உரிமை தொகை கிடைக்க வில்லை என கூறி 20-வது வார்டு கவுன்சிலர் ரம்யா ராஜாவுடன் 100-க்கும் மேற்பட்ட பெண்கள் திண்டிவனம் தாசில்தார் அலுவல கத்தில் தாசில்தாரி டம் மனு கொடுக்க வந்தனர். அப்போது தாசில்தார் இல்லாததால் திண்டிவனம் வருவாய் ஆய்வாளர் டோமிஸ் சேவியரை முற்றுகையிட்டு 100-க்கும் மேற்பட்ட பெண்கள் கடும் வாக்கு வாதத்தில் ஈடுபட்ட னர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    Next Story
    ×