என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
உள்ளூர் செய்திகள்
![பேருந்துக்கு பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்பு பேருந்துக்கு பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்பு](https://media.maalaimalar.com/h-upload/2023/04/03/1860066-20230402173949.webp)
பேருந்துக்கு பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்பு
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- பெரமாண்டப்பட்டி வரை இயங்கி வந்த அரசு பேருந்தை கே.அக்ரஹாரம் வரை இயக்க வேண்டி பொதுமக்கள் கோரிக்கைவைத்தனர்.
- நகர பேருந்து எண் 24 பி.என்ற பேருந்தை அக்ரஹாரம் வரை நீட்டிப்பு செய்யப்பட்டது.
மொரப்பூர்,
தருமபுரி மாவட்டம்,மொரப்பூர் ஊராட்சி ஒன்றியம், கம்பைநல்லூர் அருகே உள்ளது கே.அக்ரஹாரம். இக் கிராமத்திற்கு பேருந்து வசதி இல்லாமல் பொதுமக்கள் மிகவும் அவதிப்பட்டு வந்தனர்.
இந்த நிலையில் தருமபுரியிலிருந்து கம்பைநல்லூர் வழியாக பெரமாண்டப்பட்டி வரை இயங்கி வந்த அரசு பேருந்தை கே.அக்ரஹாரம் வரை இயக்க வேண்டி பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் நீண்ட நாட்களாக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த நிலையில் பொதுமக்களின் கோரிக்கை ஏற்று கம்பைநல்லூரிலிருந்து தருமபுரியில் இருந்து கம்பைநல்லூர் வழியாக பெரமாண்டப்பட்டி வரை இயங்கி வந்த நகர பேருந்து எண் 24 பி.என்ற பேருந்தை அக்ரஹாரம் வரை நீட்டிப்பு செய்யப்பட்டது.
அதனை தொடர்ந்து நேற்று மாலை அக்ரஹாரம் கிராமத்திற்கு புதிதாக பேருந்து இயக்கப்பட்டதால் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பேருந்திற்கு ஆராத்தி எடுத்து வரவேற்று சிறப்பு பூஜை செய்தனர்.
இந்த நிகழ்ச்சியில் மொரப்பூர் மேற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் ரத்னவேல்,மொரப்பூர் மேற்கு ஒன்றிய தி.மு.க. அவைத் தலைவரும்,முன்னாள் மொரப்பூர் ஒன்றிய குழு துணை தலைவருமான ஆர்.பன்னீர்செல்வம், ம.தி.மு.க. ஒன்றிய இளைஞரணி செயலாளர் ஆர்.ஜெகநாதன், ம.தி.மு.க. முன்னாள் மாவட்ட மாணவரணி அமைப்பாளர் மொ.குமரவேல், தி.மு.க. மேற்கு ஒன்றிய தகவல் தொழில் நுட்ப பிரிவு நிர்வாகி பேசும் தெய்வம், இளைஞரணி நிர்வாகி ராசி தமிழ், ஊர் பிரமுகர்கள் நாகேந்திரன், சின்னசாமி, சொக்கலிங்கம், கிருஷ்ணன், சிங்காரம், திருப்பதி, ரங்கன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.