என் மலர்
உள்ளூர் செய்திகள்

X
தமிழில் அர்ச்சனை செய்து வழிபாடு நடத்தப்பட்டது.
தேனி மாவட்ட கோவில்களில் தமிழில் அர்ச்சனை செய்து வழிபாடு
By
மாலை மலர்5 Sept 2022 10:03 AM IST

- அன்னை தமிழில் அர்ச்சனை என்ற பெயரில் தமிழக அரசு கோவில்களில் தமிழில் அர்ச்சனை செய்யும் திட்டத்தை அறிவித்தது.
- தேனி மாவட்டத்தில் உள்ள கோவில்களில் தமிழில் அர்ச்சனை செய்து வழிபாடு செய்தனர்.
மேலசொக்கநாதபுரம்:
அன்னை தமிழில் அர்ச்சனை என்ற பெயரில் தமிழக அரசு கோவில்களில் தமிழில் அர்ச்சனை செய்யும் திட்டத்தை அறிவித்தது.
அதனை முறையாக நடைமுறைப்படுத்த மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வண்ணம் நாம் தமிழர் கட்சியின் தமிழ்மீட்சி பாசறை வீரத்தமிழர் முன்னணி சார்பில் கோவில்களில் தமிழில் வழிபாடு நடத்தி வருகின்றனர்.
தேனி மாவட்டத்தில் உள்ள வீரபாண்டி கவுமாரியம்மன் கோவில், தீர்த்ததொட்டி முருகன் கோவில்,போடி சுப்பிரமணிய சுவாமி கோவில், பெருமாள் கோவில் உள்ளிட்ட கோவில்களில் தேனி மாவட்ட செயலாளர் பிரேம்சந்தர் தலைமையில் தமிழில் வழிபாடு செய்தனர்.
இதில் போடி நகர செயலாளர் சரவணன் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
Next Story
×
X