என் மலர்
உள்ளூர் செய்திகள்
தியாகதுருகம் அருகே பெண்னை தாக்கிய வாலிபர் கைது
- அமுதா டிராக்டரில் இருந்து சாவியை எடுத்துகொண்டு தனது உறவினருக்கு தகவல் தெரிவித்தார்.
- அவர் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
கள்ளக்குறிச்சி:
தியாகதுருகம் அருகே சின்னமாம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் ராமலிங்கம் மனைவி அமுதா (வயது 42) இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த அருணாச்சலம் (56) என்பவருக்கும் நிலம் சம்பந்தமாக முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் அமுதாவின் நிலத்தில் இருந்த பருத்திச் செடியை, அருணாச்சலம் டிராக்டர் மூலம் உழவு ஓட்டி அழித்ததாக கூறப்படுகிறது. அப்போது அமுதா டிராக்டரில் இருந்து சாவியை எடுத்துகொண்டு தனது உறவினருக்கு தகவல் தெரிவித்தார். மேலும் ஏன் பயிரை அழித்து டிராக்டரை ஓட்டுகிறீர்கள் என அருணாச்சலத்திடம் கேட்டதாக தெரிகிறது. அப்போது அருணாச்சலம் டிராக்டரில் இருந்த கட்டையை எடுத்து அமுதாவின் உறவினர் பாலகிருஷ்ண னை தாக்க முயன்றுள்ளார்.
அப்போது அமுதா தடுக்க முயன்ற போது அவரது தலையில் அடிபட்டு காயம் அடைந்தார். தொடர்ந்து அவர் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து அமுதா கொடுத்த புகாரின் பேரில் தியாகதுருகம் போலீசார் வழக்கு பதிவு செய்து அருணாச்சலத்தை கைது செய்தனர்.