என் மலர்
உள்ளூர் செய்திகள்

X
காரைக்கால் கோட்டுச்சேரி பகுதியில் கஞ்சா விற்ற வாலிபர் கைது
By
மாலை மலர்4 Nov 2022 12:29 PM IST

- காரைக்கால் கோட்டுச்சேரி பகுதியில் கஞ்சா விற்ற வாலிபர் கைது செய்யப்பட்டார்.
- அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சா விற்கப்படுவதாக, கோட்டுச்சேரி போலீசாருக்கு ரகசியத்தகவல் கிடைத்தது.
புதுச்சேரி:
காரைக்காலை அடுத்த கோட்டுச்சேரி வெள்ளை பிள்ளையார் கோவில் அருகே உள்ள கருமாதி மண்டபம் அருகே, அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சா விற்கப்படுவதாக, கோட்டுச்சேரி போலீசாருக்கு ரகசியத்தகவல் கிடைத்தது. அதன்பேரில், நேற்று முன்தினம் இரவு, போலீசார், சம்பந்தப்பட்ட இடத்திற்கு சென்றனர்.
அப்போது போலீசாரை கண்டதும் கஞ்சா விற்ற வாலிபர் அங்கிருந்து தப்பியோடினார். இதுகுறித்து விசாரித்த போலீசார், காரைக்கால் நேருநகரைச்சேர்ந்த அமர்நாத் (வயது22) என்பது தெரியவந்தது. போலீசார் அமர்நாத்தை கைது செய்து, அவரிடமிருந்து ரூ.12 ஆயிரம் மதிப்பிலான 120 கிராம் எடைகொண்ட 12 கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தனர்.
Next Story
×
X