என் மலர்
உள்ளூர் செய்திகள்
X
கள்ளக்குறிச்சி அரசு பள்ளி அருகே கஞ்சா விற்ற வாலிபர் கைது:ஒரு கிலோ பறிமுதல்
Byமாலை மலர்8 April 2023 2:25 PM IST
- கள்ளக்குறிச்சி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி அருகே கஞ்சா விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது
- ஒரு இளைஞரை பிடித்து போலீசார் விசாரணை செய்தனர்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி அருகே கஞ்சா விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் தலைமையி லான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.
அப்போது அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அருகே சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்த ஒரு இளைஞரை பிடித்து போலீசார் விசாரணை செய்தனர். விசாரணையில் அவர் மலைக்கோட்டாலம் கிராமத்தை சேர்ந்த வெங்கடேசன் மகன் வினைத் (வயது 24) என்பதும், இவரது மொபட்டில் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்த போலீசார் அவரிடமிருந்த ஒரு கிலோ கஞ்சா மற்றும் மொபட்டை பறிமுதல் செய்தனர்.
Next Story
×
X