என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
உள்ளூர் செய்திகள்
![திருநாவலூர் அருகே மின்மோட்டார் திருடிய வாலிபர் கைது திருநாவலூர் அருகே மின்மோட்டார் திருடிய வாலிபர் கைது](https://media.maalaimalar.com/h-upload/2022/08/24/1750883-kaithu.jpg)
X
திருநாவலூர் அருகே மின்மோட்டார் திருடிய வாலிபர் கைது
By
மாலை மலர்24 Aug 2022 1:15 PM IST
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- திருநாவலூர் அருகே மின்மோட்டார் திருடிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
- சம்பவத்தன்று நேற்று பரமசிவனின் மின் மோட்டார் மற்றும் வயர்களை அதே பகுதியை சேர்ந்த வெங்கடேசன் என்பவர் திருடி சென்றுள்ளார்.
கள்ளக்கறிச்சி:
திருநாவலூர் அருகே அயன் வேலூர் பகுதியை சேர்ந்தவர் பரமசிவம் (வயது 24) விவசாய குடும்பத்தைச் சேர்ந்தவர். இந்நிலையில் இவரது வீட்டிற்கு மின் மோட்டார் மூலம் போர் வசதி செய்துள்ளார். சம்பவத்தன்று நேற்று பரமசிவனின் மின் மோட்டார் மற்றும் வயர்களை அதே பகுதியை சேர்ந்த வெங்கடேசன் என்பவர் திருடி சென்றுள்ளார். இது குறித்து பரமசிவம் திருநாவலூர் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் திருநாவலூர் சப் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் வழக்கு பதிவு செய்து மின்மோட்டாரை திருடி சென்ற வெங்கடேசனை போலீசார் களமருதூர் பஸ் நிலையத்தில் கையும் களவுமாக பிடித்தனர். மேலும் அவனிடம் விசாரணை செய்து கைது செய்தனர். மின்மோட்டார் பறிமுதல் செய்யப்பட்டது.
Next Story
×
X