என் மலர்
உள்ளூர் செய்திகள்
விவசாயியை கொலை செய்த வாலிபர் சிறையில் அடைப்பு
- விவசாயியை கொலை செய்த வாலிபரை போலீசார் சிறையில் அடைத்தனர்.
- தாயுடன் உறவில் இருந்ததால் மகன் ஆத்திரம்.
தருமபுரி மாவட்டம் பஞ்சப்பள்ளி அருகே புதுப்பேட்டை கிராமத்தை சேர்ந்த விவசாயி நாகராஜன் (50) என்பவர் தனது வீட்டில் உள்ளவர்களிடம் விவசாய தோட்டத்திற்கு சென்று வருவதாக கூறி சென்றவர், நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாத நிலையில் அவரது குடும்பத்தார் நாகராஜனை தேடி தோட்டத்திற்கு சென்று பார்த்த போது அவர் தலையில் வெட்டு காயங்களுடன் இறந்து கிடந்துள்ளார். இச்சம்பவம் குறித்து பஞ்சப்பள்ளி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இதனையடுத்து அதே பகுதியை சதிஷ்குமார் (20) என்பவரை போலீசார் கைது விசாரணை செய்தனர். அதில் சதிஷ்குமார் தாயுடன் நாகராஜன் தவறான உறவில் இருந்துள்ளார். இதனை பல முறை சதிஷ்குமார் கண்டித்துள்ளார். இதனை கேட்காமல் நாகராஜன் தொடர்ந்து அவருடன் தொடர்பில் இருந்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த அவர், நாகராஜனை வெட்டி கொலை செய்தது தெரிய வந்தது. இதனையடுத்து சதிஷ்குமார் மீது வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.