search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    இறுதிச்சடங்குக்கு கூட அனுமதிக்கவில்லை.. உயிரிழந்த யூடியூபர் ராகுலின் மனைவியும் தாயும் மாறி மாறி குற்றச்சாட்டு
    X

    இறுதிச்சடங்குக்கு கூட அனுமதிக்கவில்லை.. உயிரிழந்த யூடியூபர் ராகுலின் மனைவியும் தாயும் மாறி மாறி குற்றச்சாட்டு

    • சாலை விபத்தில் யூடியூபர் ராகுல் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
    • ராகுல் ஏற்கனவே திருமணமானவர் என்ற விவரம் எனக்கு பின்னர் தான் தெரிந்தது என்று மனைவி தகவல்.

    ஈரோடு கருங்கல்பாளையத்தை சேர்ந்த பிரபாகரன் - சாகிதா தம்பதிகளின் ஒரே மகன் ராகுல் (27).

    என்ஜினீயரிங் பயின்ற ராகுல் டிக் டாக் மூலம் பிரபலமானவர். கடந்த சில வருடங்களாக இன்ஸ்டா கிராமில் பல்வேறு வாழ்க்கை சம்பவங்களையும், சினிமா பாடல்கள், வசனங்களை நகைச்சுவை உணர்வு களோடு பதிவு செய்து ஏராளமான ரசிகர்களின் ஆதரவை பெற்று இருந்தார்.

    இவர் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்னர் ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி, நேரு நகரைச் சேர்ந்த தேவிகா ஸ்ரீ என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

    இந்நிலையில் பொங்கல் விடுமுறைக்காக சொந்த ஊர் சென்று இருந்த தன் மனைவியை பார்க்க கவுந்தப்பாடிக்கு கடந்த 16-ந் தேதி இரவு தனது இருசக்கர வாகனத்தில் ராகுல் சென்றார்.

    அப்போது சாலையின் வளைவில் திரும்ப முயற்சி செய்தபோது எதிர்பாராத விதமாக இருசக்கர வாகனம் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த தடுப்பின் மீது மோதியது.

    இதில் தலை மற்றும் கைகளில் பலத்த காயமடைந்த ராகுல் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். ராகுல் மரணம் அவரை பின் தொடர்ந்த ரசிகர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

    இதற்கிடையே ராகுலின் மனைவி தேவிகாஸ்ரீ தனது மாமியார் குடும்பத்தினர் குறித்து பரபரப்பு குற்றச்சாட்டு கூறியுள்ளார்.

    இது தொடர்பாக பேசிய தேவிகாஸ்ரீ, "ராகுல் இன்ஸ்டாகிராம் மூலமாக தான் எனக்கு பழக்கமானார். எங்களுக்கு கவுந்தப்பாடி புது மாரியம்மன் கோவில் திருமணம் நடந்தது.

    அதற்கு பின்னர் தான் அவர் ஏற்கனவே திருமணமானவர் என்ற விவரம் எனக்கு தெரிந்தது. கோவை சேர்ந்த பெண்ணுடன் பெண்ணுடன் ராகுல் 6 மாதம் வாழ்ந்துள்ளார். அதன் பின்னர் எனது மாமியாரின் தொந்தரவால் அந்த பெண் பிரிந்து சென்று விட்டார். அதன் பிறகு அந்தப் பெண்ணுக்கும் என் கணவருக்கும் விவாகரத்து ஆனது.

    இருந்தாலும் இதனை நான் ஏற்றுக்கொண்டு அவருடன் சந்தோஷமாக வாழ்ந்து வந்தேன். நாங்கள் ஓர் ஆண்டாக மாமியார் வீட்டில் தான் வசித்து வந்தோம். அதன் பின்னர் தான் ஈரோடு வளையகார வீதியில் தனிக்குடித்தனம் வந்தோம். இந்நிலையில்தான் ராகுலுக்கு குடிப்பழக்கம் ஏற்பட்டுள்ளது.

    எனது மாமியார் ராகுல் மது குடிப்பதை ஊக்குவித்தார். இது தொடர்பாக என் மாமியாரிடம் நான் கேட்டபோது எனக்கும் அவருக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டது. ராகுலும் என்னை அடித்து துன்புறுத்தினார். ஆனால் இதையும் தாண்டி அவருடன் நான் சந்தோஷமாக வாழ்ந்து வந்தேன்.

    ராகுலுக்கு சினிமா மற்றும் பைக் மீது அதிக இஷ்டம். அவரிடம் அதிகமாக குடிக்க வேண்டாம் என்று வலியுறுத்தி வந்தேன். ஆனால் அவர் அதை காதில் வாங்கிக் கொள்ளவில்லை. இந்நிலையில் கடந்த 16-ந் தேதி இரவு என்னை பார்ப்பதற்காக ராகுல் தனது மோட்டார் சைக்கிளில் கவுந்தப்பாடி நோக்கி வந்த போது தான் சாலை விபத்தில் உயிரிழந்தார்.

    அதன்பின் எனது மாமியார் வீட்டினர் என்னை முழுவதுமாக ஒதுக்கி வைத்தனர். ராகுலின் இறுதி காரியத்துக்கு கூட என்னை அனுமதிக்கவில்லை. கணவரை இழந்த வேதனையில் உள்ளேன்.

    என் மாமியார் வீட்டினர் ராகுலின் ஆதார் மொபைல் போன் உள்ளிட்ட பொருட்களை கேட்டு எனக்கு போன் செய்தனர். ராகுலுடன் நான் வாழ்ந்ததை மறைக்க நினைக்கின்றனர். ஆனால் அந்த பொருட்களை அவர்களுக்கு தரமாட்டேன். அவருடன் நான் வாழ்ந்ததற்கு அது தான் ஆதாரம்" என்று தெரிவித்தார்.

    மருமகள் குற்றச்சாட்டை தொடர்ந்து ஈரோட்டில் வசிக்கும் ராகுலின் தாய் சாகிதா கூறியதாவது:-

    நேரம் சரியில்லை என்று கூறி எனது மகனும், மருமகளும் தனி குடித்தனம் சென்றனர். என் மகளைப் போலத்தான் எனது மருமகளை நாங்கள் பார்த்துக்கொண்டோம். எனது மகன் ராகுலுக்கு மது குடிக்கும் பழக்கம் கிடை யாது. என் மகன் நினைவாக உள்ள பொருட்களை கேட்டோம்.

    மருமகளை அழைத்து வர சென்ற போதுதான் விபத்தில் ராகுல் சிக்கி உயிரிழந்தார். நான் ராகுலுக்கு மது வாங்கி கொடுக்கவில்லை. என் மகன் நல்லவன். என் மருமகளை நான் எந்த ஒரு தொந்தரவும் செய்யவில்லை" என்று தெரிவித்தார்.

    Next Story
    ×