என் மலர்tooltip icon

    கதம்பம்

    நான்கு தமிழ்
    X

    நான்கு தமிழ்

    • சுந்தரர் மிடுக்குள்ளவர்; கயிலையில் சிவப்பரம்பொருளின் அணுக்கத் தொண்டராக இருந்தவர்;
    • அப்பர், எண்பது வயது முதியவர்; குறைகளை உணர்ந்துத் திருந்தியவர்;

    இயல், இசை, நாடகம் என்று முத்தமிழ் உண்டு என்பது யாவரும் அறிந்ததே. வாரியார் சுவாமிகள் இயலில் நான்கு தமிழ் உண்டு என்கிறார். அவை தேவாரத் திருவாசகங்களில் உண்டு என்கிறார்!

    கொஞ்சு தமிழ்:

    திருஞானசம்பந்தர் உமை அன்னை தந்த ஞானப்பாலை உண்டு தமது மூன்றாவது வயதிலேயே "தோடுடைய செவியன்'' என்று தம் மழலை மொழியில் கொஞ்சிப் பாடினார். அதனால் அவர் தமிழ் கொஞ்சு தமிழ்.

    விஞ்சு தமிழ்:

    சுந்தரர் மிடுக்குள்ளவர்; கயிலையில் சிவப்பரம்பொருளின் அணுக்கத் தொண்டராக இருந்தவர்; திருமுனைப்பாடி நாட்டு அரசராகிய நரசிங்கமுனையர் வளர்ப்புப் பிள்ளை; ஆண்டவரிடத்து அவர் உரிமையுடன் பேசுவது இயல்பு தானே? அதனால் அவர் தமிழ் விஞ்சு தமிழ்.

    கெஞ்சு தமிழ் :

    அப்பர், எண்பது வயது முதியவர்; குறைகளை உணர்ந்துத் திருந்தியவர்; தன்னைத் தாழ்த்திக் கொண்டு மன்றாடுபவர்; அதனால் அவர் தமிழ் கெஞ்சு தமிழ்.

    நெஞ்சு தமிழ்:

    மாணிக்கவாசகர், "அழுதால் உன்னைப் பெறலாமே''என்றவர்; பக்தியால் நெஞ்சுருகி, நைந்து நெகிழ்ந்த உள்ளத்துடன் உருகுவார். அதனால் அவர் தமிழ் நெஞ்சு தமிழ்.

    -வீரமணி

    Next Story
    ×