என் மலர்
செய்திகள்
X
ஆண்ட்ராய்டு நிறுவனரின் புதிய ஸ்மார்ட்போன் வெளியானது
Byமாலை மலர்31 May 2017 2:04 PM IST (Updated: 31 May 2017 2:04 PM IST)
ஆண்ட்ராய்டு நிறுவனர் ஆண்டி ரூபினின் எசென்ஷியல் போன் ஏற்கனவே அறிவிக்கப்பட்டதை போன்று வெளியிடப்பட்டுள்ளது. அதிகம் எதிர்பார்க்கப்பட்ட எசென்ஷியல் ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்களை தொடர்ந்து பார்ப்போம்.
புதுடெல்லி:
ஆண்ட்ராய்டு நிறுவனர் ஆண்டி ரூபின் ஏற்கனவே அறிவித்ததை போன்று எசென்ஷியல் போனினை அறிமுகம் செய்துள்ளது. அதிகம் எதிர்பார்க்கப்பட்ட எசென்ஷியல் ஸ்மார்ட்போனில் 5.7 இன்ச் எட்ஜ்-டூ-எட்ஜ் டிஸ்ப்ளே வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 835 சிப்செட் மற்றும் டைட்டானியம் மற்றும் செராமிக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.
புதிய எசென்ஷியல் ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்களில் ஒன்றாக அதன் 360 டிகிரி கேமரா உள்ளது. இதனை மாக்னெடிக் கனெக்டர் மூலம் ஸ்மார்ட்போனில் இணைத்து கொள்ள முடியும். இந்த கேமராவை கொண்டு UHD 3840x1920 பிக்சல் ரெசல்யூஷன் கொண்ட வீடியோக்களை பதிவு செய்ய முடியும்.
எசென்ஷியல் போன் சிறப்பம்சங்கள்:
* 5.7 இன்ச் 2560x1312 QHD டிஸ்ப்ளே, கார்னிங் கொரில்லா கிளாஸ் 5
* 2.45 ஜிகாஹெர்ட்ஸ் குவால்காம் ஸ்னாப்டிராகன் 835 ஆக்டா கோர் பிராசஸர்
* 4 ஜிபி ரேம்
* 128 ஜிபி இன்டெர்னல் மெமரி
* ஆண்ட்ராய்டு இயங்குதளம்
* கைரேகை ஸ்கேனர்
* 13 எம்பி டூயல் RGB + ஃபியூஷன் டெக் மோனோ கேமரா,
* 13 எம்பி ட்ரூ மோனோகுரோம் மோட் f/1.85 லென்ஸ்,
* 4K 30fps, 1080p 60fps அல்லது 720p 120fps தரத்தில் வீடியோ பதிவு செய்யும் வசதி
* 8 எம்பி செல்ஃபி கேமரா
* யுஎஸ்பி டைப்-சி போர்ட்
* ப்ளூடூத் 5.0
* 3040 எம்ஏஎச் பேட்டரி
அமெரிக்காவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள எசென்ஷியல் போன் விலை $699 டாலர்கள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. நான்கு நிறங்களில் கிடைக்கும் எசென்ஷியல் போன் மற்றும் 360 டிகிரி கேமரா அறிமுக சலுகையின் கீழ் $749 என்ற விலையில் விற்பனை செய்யப்படுகிறது.
புதிய எசென்ஷியல் போனில் ஹெட்போன் ஜாக் வழங்கப்படாத நிலையில், போனுடன் ஹெட்போன் டாங்கிள் வழங்கப்படும். இத்துடன் இந்த ஸ்மார்ட்போனில் எவ்வித ஆண்ட்ராய்டு பதிப்பு வழங்கப்படும் என்றும் அந்நிறுவனம் தெரிவிக்கவில்லை.
Next Story
×
X