search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    கேரளாவில் 10-வது நாள் பாதயாத்திரை: மாதா அமிர்ந்தானந்தா மயி தேவியுடன் ராகுல் காந்தி சந்திப்பு
    X

    மாதா அமிர்தானந்த மயி தேவியை சந்தித்து பேசிய ராகுல்காந்தி


    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    கேரளாவில் 10-வது நாள் பாதயாத்திரை: மாதா அமிர்ந்தானந்தா மயி தேவியுடன் ராகுல் காந்தி சந்திப்பு

    • ராகுல் காந்தி இன்று காலை 7 மணிக்கு கொல்லம் கருநாகப்பள்ளியில் இருந்து பாதயாத்திரையை தொடங்கினார்.
    • மாதா அமிர்ந்தானந்தா மயி தேவி செய்து வரும் தொண்டு என்னை ஈர்த்துவிட்டது என்று ராகுல் காந்தி கருத்து பதிவிட்டுள்ளார்.

    திருவனந்தபுரம்:

    அகில இந்திய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை ஒற்றுமை பயணம் மேற்கொண்டுள்ளார்.

    கேரளாவில் நடைபயணம் மேற்கொண்டுள்ள அவர் நேற்று இரவு கொல்லம் கருநாகப்பள்ளி அருகே உள்ள மாதா அமிர்ந்தானந்த மயி தேவி மடத்திற்கு சென்றார்.

    அங்கு மாதா அமிர்ந்தானந்த மயி தேவியை சந்தித்து ஆசி பெற்றார். மாதா அமிர்ந்தானந்த மயி தேவியை சந்தித்ததை அதிர்ஷ்டமாக கருதுகிறேன். அவர் ஏழைகளுக்கும், இல்லாதோருக்கும் செய்ய அறப்பணிகளை பாராட்டுகிறேன்.

    அவர் செய்து வரும் தொண்டு என்னை ஈர்த்துவிட்டது என்று ராகுல் காந்தி கருத்து பதிவிட்டுள்ளார்.

    ராகுல் காந்தி இன்று காலை 7 மணிக்கு கொல்லம் கருநாகப்பள்ளியில் இருந்து பாதயாத்திரையை தொடங்கினார். காலை 10 மணிக்கு ஆலப்புழா மாவட்டம் காயங்குளத்தில் நிறைவு செய்தார்.

    அதன்பின்பு மாலை 5 மணிக்கு தொடங்கும் பாதயாத்திரை இரவு 8 மணிக்கு சேப்பாட்டில் நிறைவு பெறுகிறது. அங்கு காங்கிரஸ் கட்சியின் பொதுக்கூட்டம் நடக்கிறது.

    Next Story
    ×