என் மலர்
செய்திகள்
X
உலக கலாச்சார திருவிழா: அபராத தொகை ரூ.4.75 கோடியை செலுத்தியது வாழும் கலை அமைப்பு
Byமாலை மலர்6 Jun 2016 5:53 PM IST (Updated: 6 Jun 2016 5:53 PM IST)
யமுனா நதியை மாசுப்படுத்தியதற்காக விதிக்கப்பட்ட அபராத தொகையான ரூ.4.75 கோடியை வாழும் கலை அமைப்பு செலுத்தியுள்ளது.
புதுடெல்லி:
ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் தலைமையிலான வாழும் கலை அறக்கட்டளை சார்பில் கடந்த மார்ச் 11 முதல் 13-ம் தேதிவரை, டெல்லி யமுனை ஆற்றங்கரையில் உலக கலாச்சார திருவிழா நடைபெற்றது. அந்த விழாவையொட்டி, யமுனை வெள்ள சமவெளி பகுதிகளை சேதப்படுத்தியதாக வாழும் கலை அறக்கட்டளைக்கு எதிராக பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடரப்பட்டது.
அதை விசாரித்த தீர்ப்பாயம், சேதப்படுத்தியதற்கு நஷ்ட ஈடாக ரூ.5 கோடி செலுத்துமாறு உத்தரவிட்டது. முதல்கட்டமாக, ரூ.25 லட்சம் செலுத்திய வாழும் கலை அறக்கட்டளை, மீதி ரூ.4.75 கோடியை வங்கி உத்தரவாதமாக வழங்குவதாக தெரிவித்தது.
ஆனால், வாழும் கலை அமைப்புக்கு கடும் கண்டனம் தெரிவித்த தேசிய பசுமை தீர்ப்பாயம், சனிக்கிழமைக்குள் செலுத்த வேண்டும் என்று கண்டிப்புடன் தெரிவித்தது. இந்த நிலையில், ஜூன் 3 ஆம் தேதி 4.75 கோடி ரூபாய்க்கான வரைவோலையை டெல்லி மாநகர வளர்ச்சி ஆணையத்திடம் வாழும் கலை அமைப்பு வழங்கியதாக டெல்லி மாநரக வளர்ச்சி ஆணையம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் குஷ் ஷர்மா தெரிவித்துள்ளார்.

Next Story
×
X