search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தாத்ரி படுகொலை: மகா பஞ்சாயத்து அழைப்பு மற்றும் எப்.ஐ.ஆர். கோரிக்கையால் பதற்றம்
    X

    தாத்ரி படுகொலை: மகா பஞ்சாயத்து அழைப்பு மற்றும் எப்.ஐ.ஆர். கோரிக்கையால் பதற்றம்

    தாத்ரியில் படுகொலை செய்யப்பட்டவரின் வீட்டில் இருந்து எடுக்கப்பட்டது மாட்டிறைச்சி தான் என்ற தடவியல் பரிசோதனை முடிவால் அங்கு மீண்டும் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
    லக்னோ:

    உத்தரப்பிரதேச மாநிலம் தாத்ரி கிராமத்தில், மாட்டிறைச்சி உட்கொண்டதாகக் கூறி கடந்தாண்டு செப்டம்பர் மாதம் முகமது இக்லாக் என்பவரை கிராமமக்கள் அடித்துக்கொன்றனர். இதுதொடர்பாக, 18 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

    படுகொலை செய்யப்பட்ட இக்லாக்கின் வீட்டில் இருந்து எடுக்கப்பட்ட இறைச்சியின் மாதிரி தடயவியல் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. மதுராவில் உள்ள ஆய்வகம் இதை ஆய்வு செய்து, இக்லாக்கின் வீட்டில் இருந்தது, மாட்டின் இறைச்சிதான் என கடந்தவாரம் உறுதிசெய்தது.

    இறைச்சிக்காக மாடுகளை வெட்ட தடை செய்யப்பட்டுள்ள நிலையில், தங்கள் வீட்டில் மாட்டை வெட்டி அதன் இறைச்சியை வைத்திருந்த இக்லாக் குடும்பத்தினருக்கு எதிராக வழக்கு பதிவு செய்யவேண்டும் என காவல்துறையை கிராமமக்கள் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்ய மறுத்து விட்டனர்.

    இது தொடர்பாக ஆலோசனை செய்வதற்காக சுற்றுவட்டார கிராமத்தின் ’மகா பஞ்சாயத்து’ பஞ்சாயத்திற்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஆனால் இதற்கு காவல்துறை அனுமதி வழங்க மறுத்துவிட்டது. அசம்பாவிதங்களை தடுக்க, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, 144 தடை உத்தரவை கவுதம்புத் நகர் மாவட்ட ஆட்சியாளர் பிறப்பித்துள்ளார். இதனால் அந்த கிராமத்தில் மீண்டும் பதற்றமான சூழ்நிலை ஏறப்ட்டுள்ளது.
    Next Story
    ×