என் மலர்
செய்திகள்
X
அருணாசல பிரதேச கவர்னரின் மனைவி சென்ற காரை மர்ம கும்பல் துரத்தியதால் பரபரப்பு
Byமாலை மலர்7 Jun 2016 4:02 AM IST (Updated: 7 Jun 2016 4:02 AM IST)
அருணாசல பிரதேச கவர்னரான ஜே.பி.ராஜ்கோவாவின் மனைவி சென்ற காரை 5 பேர் கொண்ட கும்பல் துரத்திச் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது
இடாநகர் :
அருணாசல பிரதேச கவர்னரான ஜே.பி.ராஜ்கோவாவின் மனைவி கடந்த சனிக்கிழமை அசாம் மாநிலம் வழியாக இடாநகர் சென்று கொண்டிருந்தார். நண்பகல் 11.30 மணியளவில் அசாமின் தேஜ்பூர் பகுதியில் சென்ற போது அவரது காரை மற்றொரு கார் வேகமாக பின்தொடர்ந்தது.
கவர்னரின் மனைவி சென்ற காருக்கு அருகில் வந்த போது அந்த காரில் இருந்த 5 பேர், இவரது காரை நிறுத்துமாறு கூறினர். ஆனால் அதில் இருந்தவர்களை கவர்னரின் மனைவிக்கு தெரியாததால் அவர் காரை நிறுத்த வேண்டாம் என டிரைவரிடம் கூறியதுடன், காரை வேகமாக ஓட்டுமாறும் கூறினார்.
எனினும் அவரது காரை மர்ம நபர்கள் விடாமல் துரத்தினர். நீண்ட நேர போராட்டத்துக்குப்பின் மர்ம நபர்களிடம் இருந்து ஒருவழியாக தப்பிய கவர்னரின் மனைவி, ஜாகிரோடு போலீசில் புகார் செய்து விட்டு இரவில் இடாநகர் போய் சேர்ந்தார்.
இதற்கிடையே நடந்த சம்பவம் குறித்து தனது கணவருக்கும் தகவல் தெரிவித்தார். அதன்பேரில் குற்றவாளிகளை பிடிக்க இருமாநில போலீசாரும் முழுவீச்சில் களமிறங்கினர். இதன் பயனாக காரின் உரிமையாளர் உள்பட 6 பேரை சோனாபூர் போலீசார் நேற்று முன்தினம் கைது செய்தனர். அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.

Next Story
×
X