என் மலர்
செய்திகள்
வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கப்பட்டால் தேர்தலை ரத்து செய்யும் புதிய சட்டம்: மத்திய அரசுக்கு தேர்தல் ஆணையம் கடிதம்
வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கப்படும் தொகுதிகளில் தேர்தலை ஒத்திவைக்கவோ, ரத்து செய்யவோ அதிகாரம் வழங்கும் வகையில் புதிய சட்ட திருத்தம் கொண்டு வருமாறு மத்திய அரசுக்கு தேர்தல் ஆணையம் கோரிக்கை விடுத்துள்ளது.
புதுடெல்லி:

ஜனாதிபதி, துணை ஜனாதிபதி தேர்தல், பாராளுமன்றம்-சட்டமன்றங்களுக்கு நடைபெறும் தேர்தல்களை நடத்தும் தலைமை தேர்தல் ஆணையம் ஒரு தன்னாட்சி அமைப்பாகும். அரசியல் சாசனம் மற்றும் மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்துக்கு உட்பட்டு செயல்படும் இந்த அமைப்புக்கு பல்வேறு அதிகாரங்கள் வழங்கப்பட்டு உள்ளன.
குறிப்பாக, தேர்தலின் போது வாக்காளர்களுக்கு பணத்தை வாரி இறைத்து வெற்றி பெற நினைக்கும் வேட்பாளர்களை தடுக்கும் வகையில், பணம் வழங்கப்படும் தொகுதிகளில் தேர்தலை ரத்து செய்யவோ அல்லது ஒத்திவைக்கவோ தேர்தல் ஆணையத்துக்கு அதிகாரம் வழங்கப்பட்டு உள்ளது.
அரசியலமைப்பு சட்டம் 324-வது பிரிவின் கீழ் வழங்கப்பட்டுள்ள இந்த அதிகாரத்தை பயன்படுத்தியே சமீபத்திய தமிழக சட்டசபை தேர்தலின் போது அதிகப்படியான பணம் வாரியிறைக்கப்பட்ட தஞ்சாவூர், அரவக்குறிச்சி தொகுதி தேர்தலை தேர்தல் ஆணையம் ரத்து செய்தது.
இதைப்போல கடந்த 2012-ம் ஆண்டு ஜார்கண்ட் மாநிலத்தில் இருந்து டெல்லி மேல்-சபைக்கு நடந்த இடைத்தேர்தலில், தேர்தல் முடிந்த பிறகும் கூட அந்த தேர்தல் அறிவிப்பை ரத்து செய்யுமாறு ஜனாதிபதிக்கு தேர்தல் ஆணையம் பரிந்துரைத்தது.
இவ்வாறு தேர்தலை ரத்து செய்வதற்கான அதிகாரத்தை அரசியலமைப்பு சட்டம் வழங்கியிருந்தாலும், மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் கீழ் இந்த அதிகாரத்தை வழங்க வேண்டும் என தேர்தல் ஆணையம் விரும்புகிறது. அவ்வாறு வழங்கப்பட்டால் மேற்கண்ட பிரச்சினைகளுக்கு அரசியலமைப்பு சட்டத்தை பயன்படுத்த தேவையில்லை என தேர்தல் ஆணையம் கருதுகிறது.
எனவே மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தில் திருத்தம் கொண்டுவருமாறு மத்திய சட்ட அமைச்சகத்துக்கு தேர்தல் ஆணையம் கடிதம் எழுதியுள்ளது. மேலும் தேர்தலுக்குப்பின் இத்தகைய முறைகேடுகள் தெரியவந்தாலும் அந்த தேர்தல் செல்லாது என அறிவிக்கவும் அதிகாரம் வேண்டும் என தேர்தல் ஆணையம் கேட்டுக்கொண்டுள்ளது.
தற்போதைய நிலையில் மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்பிரிவு 58 ஏ-ன்படி தேர்தல்களில் ஆள்பலத்தை தவறாக பயன்படுத்துதல், வாக்குச்சாவடிகள் கைப்பற்றுதல் போன்ற பிரச்சினைகளுக்கு மட்டுமே தேர்தலை ரத்து செய்வதற்கு தேர்தல் ஆணையத்துக்கு அதிகாரம் வழங்கப்பட்டு உள்ளது.
இத்துடன் பணபலம் மூலம் தேர்தல் சீர்குலைக்கப்படும் போது அந்த தேர்தலை ரத்து செய்யவோ, ஒத்திவைக்கவோ தேவையான அதிகாரத்தையும் வழங்கும் வகையில் ‘58 பி’ பிரிவை சேர்க்க வேண்டும் என தேர்தல் ஆணையம் தனது கடிதத்தில் கோரிக்கை விடுத்து உள்ளது.
தேர்தல் ஆணையம் சார்பில் முதன்மை செயலாளர் கே.எப்.வில்பிரட் மத்திய சட்ட அமைச்சக செயலாளருக்கு இந்த கடிதத்தை எழுதியுள்ளார். இந்த பரிந்துரையை மிக முக்கியமாக எடுத்துக்கொண்டு இதன்மீது விரைவாக நடவடிக்கை எடுக்குமாறும் மத்திய அரசை அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

Next Story