என் மலர்
செய்திகள்
திரிபுரா மாநிலத்தில் ஆறு காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் திரிணாமுல் காங்கிரசில் சேர்ந்தனர்
திரிபுரா மாநில அரசியலில் திருப்பத்தை ஏற்படுத்தும் விதமாக ஆறு காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் திரிணாமுல் காங்கிரசில் சேர்ந்துள்ளனர்.
அகர்தலா:
60 சட்டமன்ற தொகுதிகளை கொண்ட திரிபுரா மாநிலத்தில் கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சி செய்துவருகிறது. இந்த மாநிலத்தில் காங்கிரஸ் கட்சிக்கு 9 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். இந்நிலையில் ஆறு காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் திரிணாமுல் காங்கிரசில் சேர போவதாக கடிதம் அளித்துள்ளதாக அம்மாநில சபாநாயகர் ராமேந்த்ரா சந்திரா செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
சபாநாயகரிடம் அளிக்கப்பட்டுள்ள கடிதத்தில் சுதீப் ராய், ஆஷிஷ் சாஹா, பிஸ்வாபாந்து சென், டிபா சந்திரா, பிராந்ஜித் சிங்கா மற்றும் திலிப் சர்க்கார் ஆகியோர் கையெழுத்திட்டுள்ளனர்.
இதில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களின் சட்டமன்ற தலைவராக இருந்த சுதீப் ராய், மேற்கு வங்கத்தில் காங்கிரஸ்-கம்யூனிஸ்ட் கட்சிகளின் கூட்டணியை எதிர்த்து தனது சட்டமன்ற தலைவர் பதவியை கடந்த வாரம் ராஜினாமா செய்தது குறிப்பிடத்தக்கது.

Next Story