என் மலர்
செய்திகள்
X
பேசக்கூடிய பிரதமரை பாரதீய ஜனதா நாட்டுக்கு வழங்கியுள்ளது: ராகுலுக்கு அமித் ஷா பதிலடி
Byமாலை மலர்7 Jun 2016 11:30 PM IST (Updated: 7 Jun 2016 11:30 PM IST)
கடந்த இரண்டு ஆண்டுகளில் பாரதீய ஜனதா அரசு என்ன செய்தது என்று கேள்வி எழுப்பிய ராகுல் காந்திக்கு பேசக்கூடிய ஒரு பிரதமரை நாட்டுக்கு பாரதீய ஜனதா வழங்கியுள்ளதாக ஜனதா தலைவர் அமித் ஷா கூறியுள்ளார்
எடா :
கடந்த இரண்டு ஆண்டுகளில் மத்தியில் ஆளும் பாரதீய ஜனதா அரசு என்ன செய்தது என்று கேள்வி எழுப்பிய காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்திக்கு பதிலடி கொடுத்துள்ள பாரதீய ஜனதா தலைவர் அமித் ஷா, பேசக்கூடிய ஒரு பிரதமரை நாட்டுக்கு பாரதீய ஜனதா வழங்கியுள்ளதாக தெரிவித்தார்.
உத்தர பிரதேச மாநிலம் எடாவில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த பாரதீய ஜனதா தலைவர் அமித் ஷா கூறியதாவது:- “ கடந்த 2 ஆண்டுகளில் பாரதீய ஜனதா என்ன செய்தது என்று அண்மையில் ராகுல் காந்தி கேட்டுள்ளார். குறைந்த பட்சம் நாங்கள் பேசக்கூடிய பிரதமரை வழங்கியிருக்கிறோம். ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி காலத்தின் 10 ஆண்டு ஆட்சி காலத்தில் ராகுல் காந்தி, சோனியா காந்தியை தவிர வேறும் யாரும் பிரதமர் பேசி கேட்டதில்லை” என்றார்.
மேலும், அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள உத்தர பிரதேச மாநில சட்டப்பேரவை தேர்தலில் பாரதீய ஜனதா கட்சி இரண்டில்- மூன்று பங்கு பெரும்பான்மையை பெறும் என்றார்.

Next Story
×
X