என் மலர்
செய்திகள்
X
மாயாவதியை தரக்குறைவாக விமர்சித்த தயாசங்கருக்கு எதிராக பிடிவாரண்டு: லக்னோ கோர்ட்டு உத்தரவு
Byமாலை மலர்26 July 2016 6:06 AM IST (Updated: 26 July 2016 6:06 AM IST)
மாயாவதியை தரக்குறைவாக விமர்சித்த தயாசங்கருக்கு எதிராக ஜாமீனில் விட முடியாத கைது வாரண்டை நேற்று லக்னோ கோர்ட்டு பிறப்பித்தது.
லக்னோ:
பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதியை உத்தரபிரதேச மாநில பா.ஜனதா துணைத்தலைவராக இருந்த தயாசங்கர் சிங் தரக்குறைவாக விமர்சித்து இருந்தார். இதையடுத்து, அவரை பா.ஜனதா மேலிடம், கட்சியை விட்டு நீக்கியது. பகுஜன் சமாஜ் கட்சியினர் புகாரின்பேரில், தயாசங்கர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தயாசங்கர் தலைமறைவாக உள்ளார்.
இந்நிலையில், லக்னோ போலீசாரின் கோரிக்கையை ஏற்று, லக்னோவில் உள்ள தலைமை ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு, தயாசங்கருக்கு எதிராக ஜாமீனில் விட முடியாத கைது வாரண்டை நேற்று பிறப்பித்தது.
தயாசங்கரை தேடி பல்வேறு மாவட்டங்களுக்கு போலீஸ் படைகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இன்னும் 2 நாட்களில் அவரை பிடிக்க முடியாவிட்டால், அவரது சொத்துகளை முடக்க போலீசார் கோர்ட்டை அணுகுவார்கள் என்று தெரிகிறது.

Next Story
×
X