என் மலர்
செய்திகள்
X
பீகாரில் வெள்ள அபாயம் நீடிப்பு: 35 லட்சம் மக்கள் பாதிப்பு - பலி எண்ணிக்கை 153 ஆக உயர்வு
Byமாலை மலர்28 Aug 2016 2:22 PM IST (Updated: 28 Aug 2016 2:22 PM IST)
பீகாரில் மழை வெள்ளத்துக்கு 153 பேர் பலியாகி உள்ள நிலையில் தொடர்ந்து அங்கு வெள்ள அபாயம் நீடிப்பதால் 12 மாவட்டங்களில் வாழும் சுமார் 35 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பாட்னா:
வட மாநிலங்களில் தென்மேற்கு பருவ மழை தீவிரம் அடைந்துள்ளது. இதன் காரணமாக கங்கையில் வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது. கங்கை நதி ஓடும் உத்தரபிரதேசம், பீகார், மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களில் கடுமையான வெள்ளச் சேதம் ஏற்பட்டுள்ளது.
பீகார் மாநிலத்தில் கங்கையிலும் மற்றும் சோனே, புன்பும், புர்கிகான்டக், காக்ரா, கோசி போன்ற ஆறுகளிலும் வெள்ளம் அபாய அளவை தாண்டி ஓடுகிறது. இதனால் அதன் கரையோர கிராமங்களை வெள்ளம் சூழ்ந்துள்ளது.
இதனால் 12 மாவட்டங்களில் 2037 கிராமங்கள் வெள்ளத்தில் மிதக்கிறது. மாவட்டம் முழுவதும் 35 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் அங்கு முகாமிட்டு மீட்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
பக்ஸார், போஜ்பூர், பாட்னா, வைஷாலி, சரன், பெகுசராய், சமஸ்திபூர், லகிசாராய், காகரியா, முங்கர், பாகல்பூர், கதிஹார் மாவட்டங்கள் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன. ஒரு வாரத்துக்கும் மேலாக வெள்ளம் வடியாமல் அபாய கட்டத்தில் இருக்கிறது. இந்த மாவட்டங்களில் வெள்ளம் சூழ்ந்த பகுதியில் தவித்த 5 லட்சம் மக்கள் மீட்கப்பட்டு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.
12 மாவட்டங்களிலும் மழைக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 153 ஆக உயர்ந்துள்ளது. போஜ்பூர், பெகுசாராய் மாவட்டத்தில் நேற்று மேலும் 2 பேர் உடல்களை தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் மீட்டனர்.
பீகாரில் வெள்ளம் பாதித்த பகுதிகளை முதல்- மந்திரி நிதிஷ்குமார் விமானத்தில் சென்று பார்வையிட்டார். பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரணப் பணிகளை முடுக்கிவிட்டார்.
மேற்கு வங்காளத்தில் மால்டா மாவட்டம் மழை வெள்ளத்தால் மோசமாக பாதிக்கப்பட்டு உள்ளது. இங்கு மழைக்கு 4 பேர் பலியாகி உள்ளனர்.
உத்தரபிரதேச மாநிலத்தில் வாரணாசி, அலகாபாத், காசிபூர், பல்லியா ஆகிய மாவட்டங்களில் கங்கை வெள்ளத்தால் 987 கிராமங்களில் 8.7 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
உத்தரகாண்ட், இமாசல பிரதேச மாநிலத்தின் பல பகுதிகளும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு உள்ளது. பஞ்சாப், அரியானா மாநிலங்களில் பெய்த மழை காரணமாக வெப்பம் தணிந்துள்ளது. டெல்லியிலும் வெப்பம் குறைந்தது.

Next Story
×
X