என் மலர்
செய்திகள்
X
பெங்களூருவில் தமிழக பெண் என்ஜினீயர் கற்பழிப்பு வழக்கில் வாலிபர் கைது
Byமாலை மலர்6 Sept 2016 7:54 AM IST (Updated: 6 Sept 2016 7:55 AM IST)
பெங்களூருவில் தனியார் விடுதிக்குள் புகுந்து கத்திமுனையில் தமிழக பெண் என்ஜினீயரை கற்பழித்த வழக்கில் வாலிபர் கைது செய்யப்பட்டார்.
பெங்களூரு:

பெங்களூருவில் கம்ப்யூட்டர் என்ஜினீயராக பணி புரிந்து வந்த தமிழ்நாட்டை சேர்ந்த ஒரு பெண் பரப்பன அக்ரஹாரா பகுதியில் தனியார் விடுதி ஒன்றில் தங்கி இருந்து பணி புரிந்து வந்தார்.
கடந்த மாதம் 25-ந் தேதி விடுதியில் அவர் மட்டும் தனியாக இருந்தார். அப்போது விடுதி அறைக்குள் புகுந்த மர்மநபர் ஒருவர் கத்திமுனையில் மிரட்டி அந்த பெண்ணை கற்பழித்ததாக கூறப்படுகிறது.
பின்னர் அந்த நபர் அங்கு இருந்து தப்பிச் சென்றார். பெங்களூரு நகரம் முழுவதும் பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்திய இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.
மேலும், குற்றவாளியை கண்டுபிடிக்க 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. தனிப்படை போலீசார் அந்த பெண் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் குற்றவாளியின் மாதிரி புகைப்படத்தை வரைந்து தேடி வந்தனர்.
இந்த நிலையில் புகைப்படத்தின் மாதிரியை வைத்து பதுங்கி இருந்த குற்றவாளியை போலீசார் மடக்கிப்பிடித்து கைது செய்தனர். விசாரணையில் அவர் கோலார் மாவட்டம் சிகோந்தஹள்ளி பகுதியைச் சேர்ந்த முரளி (வயது 24) என்பது தெரியவந்தது. பல்வேறு திருட்டு சம்பவங்களில் தொடர்புடைய அவர் ஏற்கனவே ஜெயிலுக்கு சென்று வந்தவர் என விசாரணையில் தெரியவந்தது.
இதற்கிடையே இத்தகைய குற்ற சம்பவங்களை தடுக்கும் விதமாக பெங்களூருவில் உள்ள தனியார் விடுதியில் பெண்களுக்கு பாதுகாப்பு ஏற்படுத்துமாறும், விடுதியில் கண்காணிப்பு கேமராக்களை அமைக்குமாறும் விடுதி உரிமையாளர்களை பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Next Story
×
X