என் மலர்
செய்திகள்
X
உத்தரபிரதேசத்தில் 2,500 கி.மீ. யாத்திரை ராகுல் காந்தி இன்று தொடங்குகிறார்
Byமாலை மலர்6 Sept 2016 8:31 AM IST (Updated: 6 Sept 2016 8:31 AM IST)
காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி உத்தரபிரதேசத்தில் 2,500 கி.மீ. யாத்திரையை இன்று (செவ்வாய்க்கிழமை) தொடங்குகிறார்
தியோரியா:

உத்தரபிரதேசத்தில் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. இதில் வெற்றி பெற்று ஆட்சியை பிடிப்பதற்காக சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ், பா.ஜனதா மற்றும் காங்கிரஸ் போன்ற கட்சிகள் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.
இந்த தேர்தலில் வெற்றி பெற்று சமீபகாலமாக பல மாநில சட்டசபை தேர்தல்களில் பெற்ற தொடர் தோல்விகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கவும், தேசிய அளவில் நிலவும் அரசியல் தேக்க நிலையை போக்கவும் காங்கிரஸ் முனைப்புடன் களமிறங்கி உள்ளது. இதற்காக டெல்லி முன்னாள் முதல்-மந்திரி ஷீலா தீட்சித்தை முதல்-மந்திரி வேட்பாளராக அறிவித்து தேர்தல் பணிகளை தொடங்கிவிட்டது.
இதில் ஒரு பகுதியாக காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி உத்தரபிரதேசத்தில் 2,500 கி.மீ. தூர பிரசார யாத்திரையை இன்று (செவ்வாய்க்கிழமை) தொடங்குகிறார். ‘தியோரியாவில் இருந்து டெல்லி வரையிலான கிசான் யாத்திரை’ என்று பெயரிடப்பட்டு உள்ள இந்த யாத்திரை, ராகுல் காந்தியின் அரசியல் வரலாற்றில் மிக நீண்ட யாத்திரை ஆகும்.
விவசாயிகளின் கடன் தள்ளுபடி, மின் கட்டண குறைப்பு, பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயம் ஆகிய 3 பிரச்சினைகளை மையமாக வைத்து நடத்தப்படும் இந்த யாத்திரை, மாநிலத்தின் அனைத்து சட்டமன்ற தொகுதிகளுக்கும் சென்று வருமாறு திட்டமிடப்பட்டு உள்ளது. இதற்காக ராகுல் காந்தி மற்றும் கட்சி தொண்டர்களுக்கு என பிரத்யேக ரதங்கள் உருவாக்கப்பட்டு உள்ளன.
இந்த யாத்திரையின் போது ராகுல் காந்தி, விவசாயிகளுடன் கலந்துரையாடல் நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. அப்போது விவசாயிகளின் கோரிக்கைகள் அடங்கிய விண்ணப்பங் களை பெற்றுக்கொள்கிறார். பின்னர் அவற்றின் அடிப்படையில் காங்கிரஸ் தேர்தல் அறிக்கை தயாரிக்கப்படும். இந்த யாத்திரை ருத்ராபூர் தொகுதிக்கு உட்பட்ட பக்சல்டி கிர்த்திப்புரா கிராமத்தில் இன்று காலை 10.30 மணிக்கு தொடங்குகிறது. ராகுல் காந்தியின் இந்த யாத்திரைக்கான செயல் திட்டங்களை பிரபல தேர்தல் நுணுக்கவாதியான பிரசாந்த் கிஷோர் வகுத்து உள்ளார்.
இந்த யாத்திரை குறித்து ராகுல் காந்தி தனது ‘டுவிட்டர்’ தளத்தில் கூறுகையில், ‘செப்டம்பர் 6-ந் தேதி (இன்று) தொடங்கும் தியோரியா முதல் டெல்லி வரையிலான எனது யாத்திரை, அரசு நிதியில் இருந்து விவசாயிகள், ஏழைகள் மற்றும் தொழிலாளர்களுக்கான உரிமையை பெறுவதற்கான பிரசார யாத்திரையாக அமையும்’ என்று தெரிவித்து உள்ளார்.
காங்கிரஸ் கட்சி சார்பில் ஷீலா தீட்சித் தலைமையில் ஒரு யாத்திரையும், மாநில காங்கிரஸ் தலைவர் ராஜ் பப்பர் தலைமையில் மற்றொரு யாத்திரையும் உத்தரபிரதேசத்தில் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

Next Story
×
X