என் மலர்
செய்திகள்
X
கெஜ்ரிவாலுக்கு தொண்டையில் ஆபரேஷன் - பெங்களூர் ஆஸ்பத்திரியில் 13-ந்தேதி சிகிச்சை
Byமாலை மலர்6 Sept 2016 10:06 AM IST (Updated: 6 Sept 2016 10:06 AM IST)
கெஜ்ரிவாலுக்கு வருகிற 13-ந் தேதி பெங்களூரில் உள்ள நாராயணா மருத்துவமனையில் தொண்டையில் அறுவை சிகிச்சை நடைபெற உள்ளது.
புதுடெல்லி:
டெல்லி முதல்-மந்திரியும் ஆம் ஆத்மி கட்சித் தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் நீரிழிவு மற்றும் தொடர் இருமல் பிரச்சினையால் அவதிப்பட்டு வருகிறார். குறிப்பாக கெஜ்ரிவாலின் தொண்டையில் ஏறபட்டுள்ள அலர்ஜி அவரை படாதபாடு படுத்தியபடி உள்ளது.
தொடர் இருமலைக் கட்டுப்படுத்த முடியாமல் தவித்த கெஜ்ரிவாலுக்கு கடந்த ஆண்டு பெங்களூரில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டது. என்றாலும் அவர் இருமல் பிரச்சினை குறையவில்லை.
இந்த நிலையில் விரைவில் நடைபெற உள்ள உத்தரபிரதேசம், பஞ்சாப், கோவா மாநில சட்ட சபை தேர்தல்களின் போது ஆம்ஆத்மி வேட்பாளர்களுக்காக தீவிர பிரசாரம் செய்ய வேண்டிய நிர்ப்பந்தம் கெஜ்ரிவாலுக்கு ஏற்பட்டுள்ளது. அதற்கு தயாராகி வரும் கெஜ்ரிவால் அதற்கு முன்பு தனது இருமல் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண திட்டமிட்டுள்ளார்.
அவரை பரிசோதித்த டாக்டர்கள், தொண்டையில் சிறு ஆபரேஷன் செய்ய வேண்டும் என்று கூறியுள்ளனர். அதை கெஜ்ரிவால் ஏற்றுள்ளார்.
இதையடுத்து கெஜ்ரிவாலுக்கு வருகிற 13-ந் தேதி பெங்களூரில் உள்ள நாராயணா மருத்துவமனையில் அறுவை சிகிச்சை நடைபெற உள்ளது. அறுவை சிகிச்சைக்குப் பிறகு அந்த ஆஸ்பத்திரியில் கெஜ்ரிவால் 10 நாட்கள் தங்கி இருக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
இந்த அறுவை சிகிச்சைக்கு முன்னதாக வரும் 8-ந்தேதி தொடங்கி 11-ந்தேதி வரை 4 நாட்கள் பஞ்சாப் மாநிலத்தில் சுற்றுப்பயணம் செய்து அவர் தேர்தல் பிரசாரம் செய்ய திட்டமிட்டுள்ளார்.
கெஜ்ரிவாலுக்கு அறுவை சிகிச்சை நடக்க இருப்பதை முன்னிட்டு 13-ந்தேதி முதல் முதல்வர் பொறுப்பை துணை முதல்வர் மணிஷ் சிசோடியா கவனிப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சிகிச்சை முடிந்து கெஜ்ரிவால் 22-ந்தேதி பெங்களூரில் இருந்து டெல்லி திரும்புவார் என்று தெரிய வந்துள்ளது.

Next Story
×
X