என் மலர்
செய்திகள்
X
வறட்சியால் விவசாயிகள் கஷ்டப்படும்போது சந்திரபாபுநாயுடு வெளிநாடு செல்வதா? நடிகை ரோஜா கண்டனம்
Byமாலை மலர்6 Sept 2016 10:23 AM IST (Updated: 6 Sept 2016 10:23 AM IST)
வறட்சியால் விவசாயிகள் கஷ்டப்பட்டு கொண்டிருக்கும் போது சந்திரபாபுநாயுடு வெளிநாட்டுக்கு சென்றது குறித்து நடிகை ரோஜா கண்டனம் தெரிவித்துள்ளார்
நகரி:
ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ.வும், நடிகையுமான ரோஜா திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சுற்றுலா சென்று உள்ளார். அவர் எந்த நாட்டுக்கு சென்று உள்ளார் என்பதை ரகசியமாக வைத்து இருக்கிறார்கள்.
வறட்சியால் விவசாயிகள் கஷ்டப்பட்டு கொண்டிருக்கும் போது வெளிநாட்டுக்கு சென்று இருக்கிறார். அவருக்கு விவசாயிகள் மீது அக்கறை இல்லை. அவர் மீது ஓட்டுக்கு பணம் கொடுத்த விவகாரம் தொடர்பான வழக்கில் விசாரணைக்கு தடையானை வாங்கி உள்ளார்.
இதுபோன்ற 18 வழக்கில் விசாரணைக்கு தடை வாங்கி இருக்கிறார். அவர் வழக்குகளில் இருந்து எப்படி தப்பிப்பது என்று மட்டுமே நினைத்து கொண்டிருக்கிறார். தெலுங்கானாவில் நீர்தேக்கங்கள் கட்டி வருகிறார்கள். அதை எதிர்த்து தடுக்க முடியவில்லை. ஏனென்றால் ஓட்டுக்கு பணம் செலுத்திய வழக்கு தெலுங்கானா மாநிலத்தில் உள்ளது. இதனால் சந்திரபாபுநாயுடு பயப்படுகிறார். சிறப்பு மாநில அந்தஸ்து கேட்டு மத்திய அரசை வலியுறுத்தவும் மறுக்கிறார்.
நடிகர் பவன் கல்யாண் தேர்தல் பிரசாரத்தின் போது ஆந்திராவுக்கு சிறப்பு மாநில அந்தஸ்துக்கு போராடுவேன் என்றார். ஆனால் அதை கண்டு கொள்ளாததால் அவரை ‘ரப்பர்சிங்’ (கப்பர்சிங் என்ற படத்தில் பவன் கல்யாண் நடித்து இருந்ததற்காக) என்று விமர்சனம் செய்தேன். அதற்கு அவர் கண்டனம் தெரிவித்து உள்ளார்.
இப்போது 9-ந்தேதி முதல் போராட்டம் நடத்த அறிவித்து இருக்கிறார். இதையடுத்து அவரது ரசிகர்கள் எனக்கு போன் செய்து நீங்கள் விமர்சனம் செய்ததால்தான் பவன் கல்யாண் போராட்டத்தில் குதிக்க இருக்கிறார் என்று பாராட்டு தெரிவித்தனர்.
இவ்வாறு அவர் கூறினார்.

Next Story
×
X