என் மலர்
செய்திகள்
X
யாருடைய நிலத்தையும் ஆக்கிரமிக்கும் எண்ணம் இந்தியாவுக்கு கிடையாது: பாகிஸ்தான் மீது பிரதமர் மோடி தாக்கு
Byமாலை மலர்3 Oct 2016 7:55 AM IST (Updated: 3 Oct 2016 7:55 AM IST)
‘யாருடைய நிலத்தையும் ஆக்கிரமிக்கும் எண்ணம் இந்தியாவுக்கு கிடையாது’ என்று பிரதமர் மோடி பாகிஸ்தானை மறைமுகமாக தாக்கினார்.
புதுடெல்லி:
டெல்லியில் நேற்று மத்திய வெளியுறவு அமைச்சகம் சார்பில் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான ‘பர்வாசி பாரதீய கேந்திரா’ கட்டிட திறப்பு விழா நடந்தது.
இதில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசும்போது, காஷ்மீரை ஆக்கிரமிக்கும் நோக்குடன் காஷ்மீர் பிரச்சினையை பாகிஸ்தான் சர்வதேச அளவில் எழுப்பி வருவதை மறைமுகமாக தாக்கி பேசினார்.
விழாவில் அவர் பேசியதாவது:-
இந்தியா எந்த நாட்டையும் தாக்கியது இல்லை. பிறருடைய மண்ணை ஆக்கிரமிக்கவேண்டும் என்கிற எண்ணமும் இந்தியாவுக்கு இருந்தது கிடையாது. ஆனால் இரண்டு உலகப் போர்களின் போதும் (இவற்றில் இந்தியா நேரடியாக கலந்துகொள்ளவில்லை) 1.5 லட்சம் இந்திய ராணுவ வீரர்கள் தங்களுடைய இன்னுயிரை தியாகம் செய்தனர்.
வெளிநாடுகளில் வசிக்கும் இந்திய சமூகத்தினருக்கு அரசியலை தூண்டிவிடுவதிலோ அல்லது அன்னிய மண்ணை அபகரிப்பதிலோ நம்பிக்கை கிடையாது. மாறாக சமூகத்தில் நல்ல மனிதர்களுக்கான கொள்கைகளுடன் அந்த நாடுகளின் மக்களோடு மக்களாக ஐக்கியமாகி வாழ்கின்றனர். வெளிநாடுகளில் வாழும் இந்தியர்கள் தண்ணீரைப் போன்றவர்கள். தங்களின் தேவை மற்றும் வடிவமைப்புக்கு ஏற்ப நிறத்தை அவர்கள் மாற்றிக் கொள்கின்றனர்.
இந்த உலகிற்கு நாம் மிகப்பெரிய தியாகங்களை செய்தும் கூட நமது முக்கியத்துவத்தை இன்னும் உலக நாடுகள் உணர்ந்து கொண்டதாக தெரியவில்லை. அதனால்தான் வெளிநாடுகளுக்கு செல்லும்போதெல்லாம், இந்திய ராணுவ வீரர்களின் தியாகங்களை குறிப்பிட்டு பேசுகிறேன்.
இந்தியர்கள் பெரும்பான்மையாக வாழும் நாடுகளில், இந்தியா மீது அந்த நாடுகள் கொண்டுள்ள இனம் தெரியாத பயத்தை போக்குவதற்கு அங்கு வசிக்கும் இந்தியர்கள் உதவிடவேண்டும். வெளிநாடுகளில் வசிக்கும் அறிவுசார் இந்தியர்கள் தங்களது பலத்தை முறைப்படுத்தினால் இன்னும் வலிமை பெறுவார்கள்.
அணைகள் எப்படி நீரை ஒழுங்குபடுத்தி மின்சாரமாக்கி தருகிறதோ, அதேபோல் வெளிநாடுகளில் வசிக்கும் 2.45 கோடி இந்தியர்களும் நமது நாட்டிற்கு ஒளியேற்றவேண்டும்.
மனித நேய உதவிகளை அளிப்பதில் இன்று இந்தியா மிக முக்கிய பங்காற்றி வருகிறது. நேபாள நாட்டில் பூகம்பம் ஏற்பட்டபோது இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்க இந்தியா உதவிக்கரம் நீட்டியது. ஏமன் நாட்டில் போர் பகுதிகளில் பரிதவித்த இந்தியர்கள் மற்றும் வெளிநாட்டவர்களை பத்திரமாக இந்தியா மீட்டது. இதனால்தான் இன்று இந்தியாவை உலக நாடுகள் மனித நேய உதவி அளிக்கும் நாடாக அங்கீகரித்து உள்ளன. சிக்கலான பகுதிகளில் இருந்து தங்களுடைய குடி மக்களை வெளியேற்றுவதற்கு இந்தியாவின் உதவியையும் நாடுகின்றன.
இவ்வாறு மோடி பேசினார்.
விழாவில் யோகா மூலம் நீரிழிவு நோயில் இருந்து விடுபடுவது என்ற கையேடு ஒன்றையும் பிரதமர் மோடி வெளியிட்டார். விழாவில் மத்திய வெளியுறவு மந்திரி சுஷ்மா சுவராஜ், வெளியுறவு ராஜாங்க மந்திரிகள் வி.கே. சிங், எம்.ஜே. அக்பர் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

Next Story
×
X