என் மலர்
செய்திகள்
X
ஜெயலலிதா பூரண குணமடைய ராகுல்காந்தி வாழ்த்து
Byமாலை மலர்3 Oct 2016 12:22 PM IST (Updated: 3 Oct 2016 1:19 PM IST)
ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறும் முதல்-அமைச்சர் ஜெயலலிதா விரைவில் முழு குணமடைய வேண்டும் என்று காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல்காந்தி டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சென்னை:
முதல் அமைச்சர் ஜெயலலிதா உடல்நலக் குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவருக்கு 12-வது நாளாக டாக்டர்கள் இன்று சிகிச்சை அளித்து வருகிறார்கள். லண்டனில் இருந்துவந்துள்ள டாக்டர் ரிச்சர்டு ஜான்பீலே ஆலோசனையின் பேரில் தற்போது சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதையடுத்து முதல்-அமைச்சர் ஜெயலலிதா உடல் நிலையில் தொடர்ந்து முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
ஜெயலலிதா சிகிச்சை பெறும் அப்பல்லோ ஆஸ்பத்திரி முன்பு தினமும் அமைச்சர்கள், அ.தி.மு.க எம்.எல்.ஏக்கள், நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் வந்து செல்கிறார்கள்.
இன்றும் அ.தி.மு.க தொண்டர்களும் மகளிர் அணியினரும் ஆஸ்பத்திரி முன்பு திரண்டிருந்தனர்.
ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் முதல்-அமைச்சர் ஜெயலலிதா குணமடைய அரசியல் தலைவர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.
இதே போல் காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தியும் டுவிட்டரில் வாழ்த்து செய்தி வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது:-
ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறும் முதல்-அமைச்சர் ஜெயலலிதா விரைவாக பூரண குணம் அடைந்து வீடு திரும்ப பிரார்த்திக்கிறேன்.
இவ்வாறு அதில் ராகுல் காந்தி கூறி உள்ளார்.

Next Story
×
X