என் மலர்
செய்திகள்
X
கேரளா: பா.ஜ.க தொண்டர் கொலையைக் கண்டித்து நடைபெற்ற முழு அடைப்பு போராட்டத்தில் வன்முறை
Byமாலை மலர்13 Oct 2016 1:00 PM IST (Updated: 13 Oct 2016 1:00 PM IST)
கேரளாவில் பாரதிய ஜனதா தொண்டர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெறுகிறது. இந்த போராட்டத்தின் போது சில இடங்களில் வன்முறை சம்பவங்கள் நடைபெற்றன.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டம் தலச்சேரி அருகே உள்ளது பினராய் கிராமம். இது கேரள முதல்-மந்திரி பினராய் விஜயனின் சொந்த ஊர் ஆகும்.
இந்த ஊரைச் சேர்ந்த பாரதிய ஜனதா கட்சி தொண்டர் ரமீத் (வயது 29) என்பவர் நேற்று காலை படுகொலை செய்யப்பட்டார்.
ரமீத் படுகொலைக்கு கம்யூனிஸ்டு கட்சியினரே காரணம் என்று பாரதிய ஜனதா கட்சியினர் குற்றம் சாட்டினர். கொலையாளிகளை கைது செய்ய கோரி அவர்கள் போராட்டத்திலும் ஈடுபட்டனர். மேலும் இச்சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து இன்று மாநிலம் தழுவிய முழு அடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன் காரணமாக திருவனந்தபுரம், கொச்சி, எர்ணாகுளம், பாலக்காடு உள்பட மாநிலம் முழுவதும் கடைகள் அடைக்கப்பட்டிருந்தது. பஸ், ஆட்டோக்கள் ஓடவில்லை.
கொலை நடந்த கண்ணூர் மாவட்டத்தில் அனைத்து கடைகளும் மூடப்பட்டிருந்தது. அங்கு பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டது.
திருவனந்தபுரத்தில் பாரதிய ஜனதா கட்சியினர் பல இடங்களில் ஊர்வலமாக சென்றனர். தலைமை செயலகம் நோக்கி சென்ற அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால் போராட்டக்காரர்களுக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
திருச்சூரில் பல இடங்களில் வன்முறை வெடித்தது. நகரின் முக்கிய சந்திப்பில் அமைக்கப்பட்டிருந்த இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தலைவர் அழிக்கோடன் ராகவன் சிலை மீது போராட்டக்காரர்கள் கல் வீசினர்.
கொச்சியில் பத்திரிகையாளர்களின் வாகனங்களும் தாக்கப்பட்டன. டெலிவிஷன் ஒளிபரப்பு வாகனங்கள் மீது கல்வீசப்பட்டது.
பாலா, கோட்டயம் பகுதிகளில் பல இடங்களில் மறியலில் ஈடுபட்ட போராட்டக்காரர்களை போலீசார் தடியடி நடத்தி விரட்டினர். கோழிக்கோட்டில் திருமண கோஷ்டியினரை போராட்டக்காரர்கள் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
குலமங்கலம், பாலக்காடு பகுதிகளில் கடைகள் மீது கல்வீசப்பட்டன. கோழிக்கடை ஒன்றும் சூறையாடப்பட்டது. ஆலப்புழா மாவட்டத்தில் பல கடைகள் மீது கல்வீச்சு நடந்தது.
முழு அடைப்பு காரணமாக திருவனந்தபுரத்தில் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். ரெயில் நிலையங்களில் வந்து இறங்கிய பயணிகள் ஆட்டோ, கார்கள் கிடைக்காமல் அவதிப்பட்டனர். அவர்களை போலீசார், போலீஸ் வாகனங்களில் அழைத்துச் சென்றனர்.

Next Story
×
X