என் மலர்
செய்திகள்
X
கான்பூர் ரெயில் விபத்து: பலி எண்ணிக்கை 142 ஆக உயர்வு
Byமாலை மலர்21 Nov 2016 1:17 PM IST (Updated: 21 Nov 2016 1:17 PM IST)
கான்பூர் அருகே இந்தூர்-பாட்னா எக்ஸ்பிரஸ் ரெயில் தடம்புரண்டு, கவிழ்ந்த விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 142 ஆக உயர்ந்துள்ளது.
கான்பூர்:
மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் இருந்து பீகார் மாநிலம் பாட்னாவுக்கு சென்ற “இந்தூர் - பாட்னா எக்ஸ்பிரஸ்” ரெயில் நேற்று அதிகாலை 3 மணிக்கு உத்தரபிரதேச மாநிலம் கான்பூர் அருகே புக்ராயான் என்ற இடத்தில் விபத்துக்குள்ளானது.
அந்த ரெயிலின் 14 பெட்டிகள் தடம் புரண்டன. இதில் 4 பெட்டிகள் ஒன்றோடு ஒன்று மோதி நொறுங்கி உருக்குலைந்தன.
ரெயில் பெட்டிகள் கடுமையாக நொறுங்கியதால் எஸ்1, எஸ்2, எஸ்3, எஸ்4 ஆகிய பெட்டிகளில் இருந்த சுமார் 300 பயணிகள் உடல் நசுங்கினார்கள். எஸ்-1, எஸ்-2 பெட்டிகளில் இருந்தவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். நேற்றிரவு வரை 120 பேர் உடல்கள் மீட்கப்பட்டது.
இன்று காலை மேலும் 122 பேர் உடல்கள் மீட்கப்பட்டது. இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 142 ஆக உயர்ந்தது.
226 பயணிகள் காயம் அடைந்தனர். அவர்கள் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர். அவர்களில் 76 பயணிகள் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இதனால் ரெயில் விபத்தில் இறந்தவர்கள் எண்ணிக்கை மேலும் உயரலாம் என்று அஞ்சப்படுகிறது.
உயிரிழந்தவர்களில் 110 பேர் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளது. அதில் 97 பேரின் உடல்கள் அவர்களது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. சிலர் யார் என்று தெரியவில்லை.
இந்த நிலையில் ரெயில்வே மந்திரி சுரேஷ் பிரபு சம்பவ இடத்தில் முகாமிட்டு சிகிச்சை பணிகளையும், சீரமைப்புப் பணிகளையும் முடுக்கி விட்டுள்ளார்.
விபத்து குறித்து உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. முதல்கட்ட விசாரணையில் எஸ்-2 பெட்டியில் சக்கரங்கள் சுழல்வதில் ஏற்பட்ட கோளாறே விபத்துக்கு காரணம் என்று தெரிய வந்துள்ளது.
மத்திய பிரதேசத்தில் ரெயில் புறப்பட்டதில் இருந்தே எஸ்-2 பெட்டியில் உள்ள சக்கரங்களில் இருந்து சத்தம் எழுந்துள்ளது. வழியில் ஒரு இடத்தில் ரெயிலை நிறுத்தி அதை பார்த்துள்ளனர்.
உஜ்ஜையினி ரெயில் நிலையத்தில் இறங்கிய ஒரு பயணி இதுபற்றி ரெயில்வே அதிகாரியிடம் கூறி இருக்கிறார். ஆனால் அதிகாரிகள், ஊழியர்கள் அதை அலட்சியம் செய்துவிட்டதாக கூறப்படுகிறது. இது பற்றியும் விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
இதற்கிடையே விபத்து நடந்த இடத்தில் ரெயில்வே மீட்புப் படையினரும், தேசிய பேரிடம் மீட்புக் குழுவினரும் முகாமிட்டு தண்டவாளத்தை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். கவிழ்ந்த சில ரெயில் பெட்டிகள் மட்டும் கிரேன் மூலம் எடுக்கப்பட்டது.
4 பெட்டிகள் உருக்குலைந்து போனதால் அவற்றை ஓரிடத்தில் குவித்தனர். தடம் புரண்ட 14 பெட்டிகளும் தண்டவாளத்தில் இருந்து அகற்றப்பட்டு விட்டது. இன்னும் 36 மணி நேரத்தில் அந்த வழித் தடத்தில் போக்குவரத்து இயல்பு நிலைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது 14 ரெயில்கள் மாற்று பாதையில் இயக்கப்பட்டு வருகின்றன.
விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.12.5 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

Next Story
×
X