search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டெல்லி துணை முதல்வர் அலுவலகத்தில் கொள்ளை: முக்கிய ஆவணங்களும் திருட்டு
    X

    டெல்லி துணை முதல்வர் அலுவலகத்தில் கொள்ளை: முக்கிய ஆவணங்களும் திருட்டு

    டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியாவின் அலுவலகத்தை கொள்ளையடித்த கும்பல், அங்கிருந்த முக்கிய ஆவணங்களையும் திருடிச் சென்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    புதுடெல்லி:

    டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியாவின் அலுவலகம் பத்பர்கஞ்ச் தொகுதியில் உள்ள வினோத் நகரில் உள்ளது. அங்கு நேற்று இரவு புகுந்த கொள்ளையர்கள் அலுவலகத்தை அடித்து நொறுக்கி சூறையாடினர். தடயத்தை மறைப்பதற்காக சிசிடிவி கேமராக்களை திருப்பி வைத்துள்ளனர். அத்துடன், அலுவலகத்தில் இருந்த முக்கிய ஆவணங்களும் திருடப்பட்டுள்ளன.

    இன்று காலையில் பணிக்கு வந்த ஊழியர் ஒருவர், அலுவலகம் அலங்கோலமாக கிடந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்து காவல்நிலையத்திற்கு தகவல் அளித்தார். மோப்பநாயுடன் வந்த போலீசார், கொள்ளை குறித்து விசாரணை நடத்தினர். கைரேகை நிபுணர்களும் வந்து தடயங்களை சேகரித்தனர்.

    அலுவலகத்தில் இருந்த கடிதங்கள், இரண்டு கம்ப்யூட்டர்களின் சி.பி.யு. ஆகியவற்றைக் காணவில்லை என ஆளுங்கட்சியின் முக்கிய நிர்வாகி ஒருவர் கூறியிருக்கிறார்.
    Next Story
    ×