search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டெல்லியில் முன்னாள் எம்.பி. சகாபுதீன் மரணம்
    X

    டெல்லியில் முன்னாள் எம்.பி. சகாபுதீன் மரணம்

    பாராளுமன்றத்தில் கடந்த 1979 முதல் 1996 வரை உறுப்பினராக இருந்த எம்.பி. சகாபுதீன் முதுமை தொடர்பான நோய்களால் பாதிக்கப்பட்டு மரணமடைந்தார்.
    புதுடெல்லி:

    பாராளுமன்றத்தில் கடந்த 1979 முதல் 1996 வரை உறுப்பினராக இருந்தவர் சையத் சகாபுதீன். 82 வயதான இவர் முதுமை தொடர்பான நோய்களால் பாதிக்கப்பட்டு டெல்லி அருகே நொய்டாவில் உள்ள ஜே.பி. மருத்துவமனையில் கடந்த 18-ந்தேதி அனுமதிக்கப்பட்டார்.

    அங்கு சிகிச்சை பலனளிக்காமல் நேற்று காலையில் அவர் மரணமடைந்தார். அவரது இறுதிச்சடங்குகள் நேற்று மாலையில் பஸ்தி நிஜாமுதீன் பகுதியில் நடந்தது. ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியை சேர்ந்த சகாபுதீனுக்கு 4 மகள்கள் உள்ளனர். இவரது ஒரே மகன் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்தார்.

    இந்திய வெளியுறவுத்துறையில் பல்வேறு நிலைகளில் பணிபுரிந்த சகாபுதீன், பின்னர் அரசியலில் நுழைந்தார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன் தீவிர அரசியலில் இருந்து அவர் ஒதுங்கினார். பிரபல முஸ்லிம் தலைவராக வலம் வந்த இவர் பாபர் மசூதி இயக்கத்தில் முக்கிய பங்காற்றியது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×