என் மலர்
செய்திகள்
X
சர்க்கரைக்கான மானியம் மீண்டும் வழங்கப்படும்: மத்திய மந்திரிசபை முடிவு
Byமாலை மலர்4 May 2017 3:03 AM IST (Updated: 4 May 2017 3:03 AM IST)
அந்தியோதயா அன்ன யோஜனா திட்ட பயனாளிகளுக்கு சர்க்கரைக்கான மானியத்தை மீண்டும் வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
புதுடெல்லி:
பொது வினியோக திட்டத்தில் வழங்கப்படும் சர்க்கரைக்கு மத்திய அரசு மானியம் வழங்கி வந்தது. இந்த மானியத்தை ரத்து செய்ய கடந்த மார்ச் மாதம் மத்திய அரசு முடிவு செய்தது. இதனால் அதிருப்தி அடைந்த சில மாநில அரசுகள், ‘அந்தியோதயா அன்ன யோஜனா’ (பரம ஏழைகள்) திட்ட பயனாளிகளுக்கு மட்டுமாவது மானியத்தை வழங்குமாறு கேட்டுக்கொண்டன.
இந்நிலையில், அந்தியோதயா அன்ன யோஜனா திட்ட பயனாளிகளுக்கு சர்க்கரைக்கான மானியத்தை மீண்டும் வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. மத்திய மந்திரிசபையின் பொருளாதார விவகாரங்களுக்கான கமிட்டி கூட்டத்தில் நேற்று இம்முடிவு எடுக்கப்பட்டது.
இதனால், நாடு முழுவதும் உள்ள இத்திட்ட பயனாளிகளான 2 கோடியே 50 லட்சம் குடும்பங்கள் பலன் அடையும்.

Next Story
×
X