என் மலர்
செய்திகள்
X
டெல்லியில் 44 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல்
Byமாலை மலர்15 May 2017 12:31 AM IST (Updated: 15 May 2017 12:31 AM IST)
டெல்லியில் வருவாய் புலனாய்வு அதிகாரிகளின் நடவடிக்கையின் பேரில் கன்டெய்னரில் மறைத்து வைக்கப்பட்ட 44 கிலோ எடை கொண்ட தங்க கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன.
புதுடெல்லி:
நாட்டில் தங்கத்தின் தேவை அதிகரித்து வருவதால் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவுக்கு விமானம் மூலம் தங்க கட்டிகளை கடத்துவது கடத்தல்காரர்களின் வாடிக்கையாக உள்ளது. இதனால் விமான நிலையங்களில் பயணிகள் மற்றும் சரக்குகள் மீதான சோதனையை விமான நிலைய அதிகாரிகள் தீவிரப்படுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் துபாயில் இருந்து குஜராத் மாநிலம் முந்திரா துறைமுகம் வழியாக டெல்லிக்கு அனுப்பி வைக்கப்பட்ட கன்டெய்னர் ஒன்றில் தங்கம் கடத்தி வரப்படுவதாக மத்திய வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து டெல்லி சந்திரவிகார் பகுதியில் வந்த சந்தேகத்துக்கு இடமான ஒரு கன்டெய்னர் லாரியை வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகள் வழிமறித்து சோதனை நடத்தினர்.
அப்போது, கோழிமுட்டைகள் அடைக்காக்க பயன்படும் ‘இன்குபேட்டர்’ சாதனத்துக்குள் 44 கிலோ எடை கொண்ட தங்க கட்டிகள் மறைத்து வைக்கப்பட்டு இருந்ததை அவர்கள் கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ.12 கோடியே 50 லட்சம் ஆகும்.
துறைமுகத்தில் கன்டெய்னரை சோதனை செய்யும்போது தங்கம் கடத்தப்படுவது தெரியாமல் இருக்க தடித்த வெள்ளி இழைகளால் தங்க கட்டிகளை இறுக்கமாக சுற்றி வைத்து கட்டி இருப்பதும் தெரியவந்தது.

Next Story
×
X