என் மலர்
செய்திகள்
X
உ.பி சட்டசபை முதல் கூட்டம்: கவர்னரை முற்றுகையிட்டு எதிர்க்கட்சியினர் கடும் அமளி
Byமாலை மலர்15 May 2017 12:24 PM IST (Updated: 15 May 2017 12:24 PM IST)
உத்தரப்பிரதேசம் மாநில சட்டசபையின் முதல் கூட்டம் இன்று தொடங்கியதுமே மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை எனக்கூறி கவர்னரை முற்றுகையிட்டு எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபட்டனர்.
லக்னோ:
உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் தனிப்பெரும்பாண்மையுடன் வெற்றி பெற்று பா.ஜ.க ஆட்சியமைத்தது. அக்கட்சியின் சார்பில் யோகி ஆதித்யநாத் முதல்வராக பொறுபேற்றார். மேலும், இரண்டு துணை முதல்வர்கள் மற்றும் 46 மந்திரிகள் பதவியேற்றனர்.
இந்நிலையில், அம்மாநில சட்டசபையின் முதல் கூட்டத்தொடர் இன்று தொடங்கும் என அறிவிக்கப்பட்டது. இந்த ஆட்சியின் முதல் கூட்டம் என்பதால் கவர்னர் ராம் நாய்க் சிறப்பு உரையுடன் கூட்டம் தொடங்கியது. மாநிலத்தில் சட்டம் - ஒழுங்கு சரியில்லை எனக் கூறி சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டனர்.
ஒரு கட்டத்தில் கவர்னரின் இருக்கையை முற்றுகையிட்ட எதிர்க்கட்சியினர் பேப்பர்களை பந்து போல் சுருட்டி கவர்னர் இருக்கையை நோக்கி வீசினர். அந்த பேப்பர் பந்துகளை அவைக்காவலர்கள் அட்டைகளை கொண்டு தடுத்து கவர்னரை பாதுகாத்தனர்.
ஆட்சியின் முதல் சட்டசபை கூட்டத்திலேயே எதிர்க்கட்சிகள் ஒன்றினைந்து அமளியில் ஈடுபட்டுள்ளதால் ஆளும் பா.ஜ.க.வினர் சிறிது கலக்கமடைந்துள்ளனர்.

Next Story
×
X