search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாராளுமன்ற இரு அவைகளிலும் கட்டாய கல்வி உரிமை திருத்த மசோதா நிறைவேறியது
    X

    பாராளுமன்ற இரு அவைகளிலும் கட்டாய கல்வி உரிமை திருத்த மசோதா நிறைவேறியது

    பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும், கட்டாய கல்வி உரிமை திருத்த மசோதா நிறைவேறியது.
    புதுடெல்லி:

    பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும், கட்டாய கல்வி உரிமை திருத்த மசோதா நிறைவேறியது.

    குழந்தைகள் இலவச, கட்டாய கல்வி பெறும் உரிமை சட்டம் கடந்த 2009-ம் ஆண்டு நிறைவேற்றப்பட்டது. இதில், திருத்தம் செய்வதற்கான மசோதா, சமீபத்தில் பாராளுமன்ற மக்களவையில் நிறைவேறியது.

    இந்நிலையில், டெல்லி மேல்-சபையில், இந்த திருத்த மசோதாவை மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை மந்திரி பிரகாஷ் ஜவடேகர் நேற்று தாக்கல் செய்தார். அ.தி.மு.க. எம்.பி. ஏ.கே.செல்வராஜ் உள்ளிட்டோர் வரவேற்றனர்.

    விவாதத்துக்கு பதில் அளித்து பிரகாஷ் ஜவடேகர் கூறியதாவது:-

    இந்த திருத்த மசோதா, ஆசிரியர்கள் பணி நியமனம் பெறுவதற்கான குறைந்தபட்ச தகுதியை பெறுவதற்கான காலக்கெடுவை 4 ஆண்டுகள் நீட்டிப்பதற்கு வகை செய்கிறது. இந்த காலக்கெடு, 2015-ம் ஆண்டு மார்ச் 31-ந் தேதியுடன் முடிவடைந்தது. இது, 2019-ம் ஆண்டு மார்ச் 31-ந் தேதிவரை நீட்டிக்கப்படுகிறது.அரசு பள்ளிகளில் பணியாற்றி வரும் 4 லட்சம் ஆசிரியர்களுக்கும், தனியார் பள்ளிகளில் பணியாற்றி வரும் 7 லட்சம் ஆசிரியர்களுக்கும் ‘ஸ்வயம்’ என்ற அமைப்பு மூலம் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கு நியாயமான கட்டணமே வசூலிக்கப்படும். இந்த பயிற்சியின் மூலம் கல்வித்தரம் மேம்படும். ஆசிரியர்களுக்கு கல்வி சாராத பணிகள் வழங்கப்படக்கூடாது என்பதுதான் அரசின் நிலைப்பாடு.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பின்னர், குரல் ஓட்டெடுப்பு மூலம், இந்த மசோதா நிறைவேறியது.

    ஏற்கனவே, மக்களவையிலும் இம்மசோதா நிறைவேற்றப்பட்டு இருப்பதால், இரு அவைகளின் ஒப்புதலையும் பெற்றுவிட்டது. 
    Next Story
    ×