search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மாநிலங்களவை தேர்தலில் நோட்டாவுக்கு எதிர்ப்பு: காங்கிரஸ் மனு மீது நாளை விசாரணை - சுப்ரீம் கோர்ட்
    X

    மாநிலங்களவை தேர்தலில் நோட்டாவுக்கு எதிர்ப்பு: காங்கிரஸ் மனு மீது நாளை விசாரணை - சுப்ரீம் கோர்ட்

    மாநிலங்களவை தேர்தலில் நோட்டா இடம்பெறும் விவகாரம் தொடர்பாக, காங்கிரஸ் கட்சியினர் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை நாளை நடைபெறும் என சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது.
    புதுடெல்லி:

    குஜராத்தில் மாநிலங்களவை தேர்தல் ஆகஸ்டு 8-ஆம் தேதி நடைபெறவுள்ளது. பா.ஜ.க. தேசிய தலைவர் அமித் ஷா, மத்திய மந்திரி ஸ்மிரிதி இரானி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் அரசியல் ஆலோசகர் அகமது படேல் உள்பட நான்கு பேர் இந்த தேர்தலில் போட்டியிடுகின்றனர். மொத்தம் உள்ள மூன்று இடங்களுக்கு நான்கு வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

    இதில் பாஜக சார்பில் மூன்று பேரும், காங்கிரஸ் சார்பில் ஒருவரும் போட்டியிடுகின்றனர்.

    இதற்கிடையே, மாநிலங்களவை தேர்தலில் நோட்டா (யாருக்கும் வாக்கு இல்லை) இடம்பெறும் என்று தேர்தல் ஆணையம்  தெரிவித்துள்ளது. மத்திய தேர்தல் ஆணையத்தின் இந்த அறிவிப்புக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வந்ததால், பாராளுமன்றத்தின் மாநிலங்களவையில் நேற்று கடும் அமளி ஏற்பட்டது.

    இந்நிலையில், மாநிலங்களவை தேர்தலில் நோட்டாவை அறிமுகம் செய்வதற்கு தடை விதிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, குஜராத் காங்கிரசார் சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்துள்ளனர். இந்த மனு மீதான விசாரணை நாளை நடைபெறும் என சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது.
    Next Story
    ×