search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகையில் தமிழகம் முதலிடம்
    X

    வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகையில் தமிழகம் முதலிடம்

    மத்திய அரசு சமீபத்தில் வெளியிட்டுள்ள தகவல்களின் படி 2016-ம் ஆண்டில் இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் அதிகளவு சுற்றுலா பயணிகள் தமிழகத்திற்கு வந்திருப்பது தெரியவந்துள்ளது.
    புதுடெல்லி:

    மத்திய அரசு சமீபத்தில் வெளியிட்டுள்ள தகவல்களில் கடந்த 2016-ம் ஆண்டில் தமிழகத்திற்கு அதிகமான வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகை புரிந்துள்ளது தெரியவந்துள்ளது. 

    இந்தியாவில் முதலிடம் பிடித்துள்ளதைத் தொடர்ந்து தமிழகத்திற்கு அடுத்தப்படியாக கேரளா இரண்டாவது இடம் பிடித்துள்ளது. மாநிலங்களவையில் மத்திய சுற்றுலாத் துறை மந்திரி மகேஷ் சர்மா வெளியிட்டு உள்ள எழுத்துப்பூர்வமான பதிலில், வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகையில் தமிழகம் முதலிடம் பிடித்து உள்ளது என தெரிவித்துள்ளார். 

    2016-ம் ஆண்டில் மட்டும் தமிழகத்திற்கு சுமார் 47.22 லட்சம் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வந்து உள்ளனர்.  இந்தியாவிற்கு சுற்றுலா வந்த மொத்த வெளிநாட்டு பயணிகள் எண்ணிக்கையில் 19.1 சதவிதம் வெளிநாட்டு பயணிகள் தமிழ் நாட்டில் சுற்றுலாவிற்கு வந்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.



    இரண்டாவது இடம் பிடித்துள்ள கேரளா மாநிலத்திற்கு 10.38 லட்சம் வெளிநாட்டு பயணிகள் சுற்றுலா வந்துள்ளனர். இது இந்தியாவிற்கு வந்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கையில் 4.2 சதவிதம் ஆகும். 

    உள்நாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகையில் தமிழகம் மற்றும் ஆந்திர பிரதேச மாநிலங்கள் 9.5 சதவிதம் கொண்டு உள்ளது. கர்நாடகா மாநிலத்திற்கு 8 சதவிதம் சுற்றுலாப் பயணிகளும், தெலுங்கானாவிற்கு 5.9 சுற்றுலாப் பயணிகளும் வருகின்றனர். இம்மாநிலங்கள் முதல் 10 இடங்களில் இடம்பெற்றுள்ளது. 

    உள்நாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகையில் கேரளாவிற்கு வருவோர் எண்ணிக்கை 1.32 கோடியாக குறைந்து உள்ளது, புதுச்சேரிக்கு 13.99 லட்சம் உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளும், 1.17 லட்சம் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும் வந்துள்ளனர்.
    Next Story
    ×