என் மலர்
செய்திகள்
X
அரசியல்வாதிகள் மறுபடியும் பள்ளிக்கு செல்ல வேண்டும் - கைலாஷ் சத்தியாத்திரி
Byமாலை மலர்14 Sept 2017 6:27 AM IST (Updated: 14 Sept 2017 6:27 AM IST)
அரசியல்வாதிகள் மறுபடியும் சராசரி பெற்றோர்களாக பள்ளிக்கு செல்ல வேண்டுமென அமைதிக்கான நோபல் பரிசு வென்ற கைலாஷ் சத்தியாத்திரி விமர்சனம் கூறியுள்ளார்.
புதுடெல்லி:
இந்தியாவில், சமீப காலமாக குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்து வருகிறது. கடந்த 8-ம் தேதி அரியானா மாநிலத்தின் குருகிராம் பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் ஏழு வயது சிறுவன் அப்பள்ளி பேருந்து நடத்தினரால் கொடூரமான முறையில் கழுத்து அறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டான். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாட்டின் பல்வேறு பகுதிகளில் பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், குழந்தைகள் மற்றும் பெண்கள் மீதான வன்முறைகளுக்கு அமைதிக்கான நோபல் பரிசு வென்ற கைலாஷ் சத்தியாத்திரி கண்டனம் தெரிவித்துள்ளார். அரசியல்வாதிகள் மறுபடியும் சராசரி பெற்றோர்களாக பள்ளிக்கு செல்ல வேண்டுமென அவர் விமர்சனம் செய்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது:-
பள்ளிகளில் அதிகரித்துவரும் பாதுகாப்பு குறைபாடுகளே, பள்ளிவளாகத்தினுள் குழந்தைகள் மீதான வன்முறைகள் அதிகரித்து வருவதற்கு முக்கிய காரணம்.
நாட்டில் உள்ள அனைத்து அரசியல்வாதிகளும் சாதாரண பெற்றோராக பள்ளிகளுக்கு செல்ல வேண்டும். அங்குள்ள சூழ்நிலைகளை நேரில் சென்று தெரிந்துகொண்டு பள்ளி நிர்வாகத்திடம் கேள்வி கேளுங்கள். பள்ளிகள் கல்வி கற்கும் நிறுவனங்களாகவும், குழந்தைகளுக்கு ஒரு புகலிடமாகவும் இருக்க வேண்டும். குழந்தைகளை சித்திரவதை செய்யும் இடமாக இருக்கக்கூடாது.
நாம் விழித்துக்கொண்டு கடுமையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டிய அவசியத்தை எழுப்பாத வரை, நம் குழந்தைகள் தொடர்ந்து பாதிக்கப்படுவார்கள். இல்லையெனில், நம் நாட்டை குழந்தைகளுக்கு பாதுகாப்பான இடமாக்குவதில் நாம் தோற்றுவிடுவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.

Next Story
×
X